ஆசிய பாதுகாப்பு சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை தட்டிச்சென்ற 2021 ஹோண்டா சிவிக்!! முழு விபரம் உள்ளே

ஆசியன் என்சிஏபி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 2021 ஹோண்டா சிவிக் காரின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆசிய பாதுகாப்பு சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை தட்டிச்சென்ற 2021 ஹோண்டா சிவிக்!! முழு விபரம் உள்ளே

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் செடான் கார் சர்வதேச சந்தைகளில் வெளியீடு செய்யப்பட்டது. இதன்படி தோற்றத்தில் மட்டுமில்லாமல், என்ஜின் தேர்வுகளிலும் புதிய சிவிக் செடான் மாடல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

ஆசிய பாதுகாப்பு சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை தட்டிச்சென்ற 2021 ஹோண்டா சிவிக்!! முழு விபரம் உள்ளே

அதேநேரம் இந்த புதிய தலைமுறை காரில் பாதுகாப்பு அம்சங்களையும் ஏராளமானவைகளை ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது. இவற்றின் உதவியால் 2021 சிவிக் செடான் கார் ஆசியன் என்சிஏபி மோதல் சோதனையில் முழு ஐந்து மதிப்பெண்களை பெற்றுள்ளது. பெரியர்கள் பாதுகாப்பில் 32-க்கு 29.28 புள்ளிகள் புதிய சிவிக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பக்கவாட்டு மோதல் சோதனையில் முழு மதிப்பெண்களை இந்த ஹோண்டா தயாரிப்பு வாகனம் பெற்றுள்ளது. இது பக்கவாட்டில் ஏற்படும் மோதலை தாங்கும் காரின் திறனை குறிக்கிறது. மேலும், முன்பக்கமாக ஏற்படும் மோதலை தாங்கும் விதத்திலும், பயணிகளின் தலை பகுதிகளுக்கான பாதுகாப்பை கொண்டதாகவும் 2021 சிவிக் விளங்குகிறது.

ஆசிய பாதுகாப்பு சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை தட்டிச்சென்ற 2021 ஹோண்டா சிவிக்!! முழு விபரம் உள்ளே

குழந்தைகளுக்கான பாதுகாப்பில் ஹோண்டா சிவிக்கின் புதிய தலைமுறை மாடல் 24 மதிப்பெண்களை பெற்றுள்ளது. இவ்வாறு கார் வடிவமைப்பை தாண்டி, பாதுகாப்பு தொழிற்நுட்பங்களையும் புதிய சிவிக் செடான் கார் அதிகமாகவே பெற்றுள்ளது. இதற்காக 21-க்கு 19.07 புள்ளிகள் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆசிய பாதுகாப்பு சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை தட்டிச்சென்ற 2021 ஹோண்டா சிவிக்!! முழு விபரம் உள்ளே

இருப்பினும் பின்பக்க சீட்பெல்ட் நினைவூட்டுவான் போன்ற சில பாதுகாப்பு அம்சங்களை 2021 சிவிக் பெறவில்லை. ஆசிய சந்தைக்கான புதிய ஹோண்டா சிவிக்கில் 6 காற்றுப்பைகள் நிலையான பாதுகாப்பு வசதியாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஹோண்டா உணர் தொகுப்புகளையும் இந்த செடான் கார் பெற்று வந்துள்ளது.

ஆசிய பாதுகாப்பு சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை தட்டிச்சென்ற 2021 ஹோண்டா சிவிக்!! முழு விபரம் உள்ளே

ஹோண்டா உணர் தொகுப்பில், மோதலை தவிர்க்கும் பிரேக்கிங் சிஸ்டம் (CMBS), டர்ன் சிக்னலை ஆக்டிவேட் செய்யாமல் சாலையில் இருந்து மிகவும் ஓரங்கப்பட்டுவதை எச்சரிக்கும் வசதி மற்றும் குறை-வேக ஃப்லோ உடன் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவை அடங்குகின்றன. ஆசியன் என்சிஏபி விதிமுறைகளில் கார்களின் மோட்டார்சைக்கிள் ஓட்டிகளுக்கான பாதுகாப்பையும் சேர்க்க ஆரம்பித்துள்ளனர்.

ஆசிய பாதுகாப்பு சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை தட்டிச்சென்ற 2021 ஹோண்டா சிவிக்!! முழு விபரம் உள்ளே

துரதிர்ஷ்டவசமாக, இது தொடர்பான சோதனையில் சில புள்ளிகளை சிவிக் இழந்துள்ளது. அதேபோல் இந்த செடான் காரில் முறையான ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்டறியும் அமைப்பு மற்றும் பின்பக்கத்தை காட்டும் ஸ்டாண்டர்ட்-ஆன கேமிரா உள்ளிட்டவையும் வழங்கப்படவில்லை.

ஆசிய பாதுகாப்பு சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை தட்டிச்சென்ற 2021 ஹோண்டா சிவிக்!! முழு விபரம் உள்ளே

ஆசியன் என்சிஏபி சோதனையில் உட்படுத்தப்பட்டிருப்பது தாய்லாந்து நாட்டில் விற்பனையில் உள்ள புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் காரின் எல்.இ+ வேரியண்ட்டாகும். இதனால் இந்த மோதல் சோதனை முடிவுகள் தாய்லாந்தை தவிர்த்து மற்ற ஆசிய நாடுகளில் உள்ள சிவிக்கிற்கு பொருந்தாது. மொத்தமாக இந்த செடான் கார் 83.47 புள்ளிகளை பெற்றுள்ளது.

ஆசிய பாதுகாப்பு சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை தட்டிச்சென்ற 2021 ஹோண்டா சிவிக்!! முழு விபரம் உள்ளே

அத்துடன் போதுமான 5-நட்சத்திர மதிப்பெண்களையும் ஆசிய என்சிஏபி சோதனையில் ஏற்றுள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா சிவிக் தற்சமயம் விற்பனையில் இல்லை. இந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை சிவிக் இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா என்பது குறித்து இதுவரையில் ஹோண்டா நிறுவனம் சார்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

ஆசிய பாதுகாப்பு சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை தட்டிச்சென்ற 2021 ஹோண்டா சிவிக்!! முழு விபரம் உள்ளே

முந்தைய தலைமுறை சிவிக் சில காலத்திற்கு இந்தியாவில் விற்பனையில் இருந்தது. விற்பனை போதிய அளவில் வரவேற்பு இல்லாததினால் சிவிக் செடான் மாடலின் விற்பனையை ஹோண்டா நிறுத்தி கொண்டது. இந்த நிலையில் சமீபத்தில் சிவிக் எஸ்ஐ என்கிற பெயரில் ஹோண்டா நிறுவனம் அதன் பிரீமியம் செடான் காரான சிவிக்கின் செயல்திறன்மிக்க வெர்சனை உலகளவில் வெளியீடு செய்தது.

ஆசிய பாதுகாப்பு சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை தட்டிச்சென்ற 2021 ஹோண்டா சிவிக்!! முழு விபரம் உள்ளே

புதிய தலைமுறை சிவிக் செடான் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சிவிக் எஸ்ஐ மாடல் உலகளாவிய சிவிக் செடான்கள் வரிசையில் அதி-செயல்திறன்மிக்க சிவிக் ஆர் மாடலுக்கு கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சிவிக் ஆர் மாடலை போன்று புதிய சிவிக் எஸ்ஐ மாடலும் வழக்கமான சிவிக் செடானில் இருந்து மாறுப்படும் வகையில் மாறுப்பட்ட வெளிப்புற மற்றும் உட்புற ஸ்டைலிங்கை சில வேரியண்ட்களில் பெற்று வந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
New-gen Honda Civic scores 5-star ASEAN NCAP rating.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X