Just In
- 23 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எச்ஆர்-வி எஸ்யூவி காருக்கு மாற்றாக ஹோண்டாவின் புதிய வெஸில்!! பிப்ரவரியில் அறிமுகமாகிறது
புதிய 2021 வெஸில் எஸ்யூவி காரை வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஹோண்டா அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியா உள்பட சில வெளிநாட்டு சந்தைகளில் புதிய ஹோண்டா எச்ஆர்-வி என்ற பெயரில் அறிமுகமாகவுள்ள இந்த காரை பற்றிய சில சுவாரஸ்யமான விபரங்கள் இந்த டீசர் வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளன.

ஹோண்டா தற்போதைய தலைமுறை எச்ஆர்-வி காரின் விற்பனையை இங்கிலாந்தில் ஏற்கனவே நிறுத்திவிட்டது. இதனால் இந்த புதிய தலைமுறை ஹோண்டா காரின் அறிமுகத்தை மிக விரைவில் இந்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படங்கள் புதிய ஹோண்டா வெஸில் கார் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கார் இணைப்பு தொழிற்நுட்பம், க்ளைமேட் கண்ட்ரோலிற்கு அழுத்தக்கூடிய பொத்தான், தொழிற்சாலையிலேயே பொருத்தப்படும் சன்ரூஃப் உள்ளிட்டவையை பெற்றுவரவுள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

மேலும் இந்த டீசர் படங்கள் ஹோண்டா வெஸில் இ-எச்இவி என்ற பெயரில் வலிமையான ஹைப்ரீட் சிஸ்டத்தை இந்த கார் பெற்றுவரவுள்ளதையும் தெரியப்படுத்துகின்றன. இந்த வேரியண்ட்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இரு எலக்ட்ரிக் மோட்டார்களுடன் வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஹைப்ரீட் சிஸ்டம் இந்தியாவிலும் சிட்டி ஹைப்ரீட் காரில் வழங்கப்படவுள்ளது. இந்த ஹைப்ரீட் என்ஜின் அமைப்பில் வழங்கப்படவுள்ள இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலமாகவே அதிகப்பட்சமாக 80கிமீ தூரத்திற்கு காரை இயக்க முடியும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.

ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சாலையில் புதிய வெஸில் எஸ்யூவி கார் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது வெளியாகி இருந்த படங்களில் எச்ஆர்-வி காரின் அப்டேட் வெர்சனாக வெளிவந்தாலும், புதிய ஹோண்டா வெஸில் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தந்தது.

குறிப்பாக காரின் முன்பக்க க்ரில் மற்றும் ஹெட்லைட் அமைப்பு நாம் கவனிக்கத்தக்க அளவில் மாறுப்பட்டிருந்தது. வெஸில் எஸ்யூவி காரில் கம்பீரமாக காட்சிதந்த காரின் முன்பகுதி மெஷ் காற்று ஏற்பான் உடன் அகலமான க்ரில் மற்றும் எல்இடி மூடுபனி விளக்குகளை கொண்டிருந்தது. லைன்கள் மற்றும் க்ரீஸ்கள் குறைவாகவே இருந்தன.

இந்தியாவில் இரண்டாம் தலைமுறை ஹோண்டா எச்ஆர்-வி காரின் அறிமுகம் இந்த ஆண்டின் இறுதியில் இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் இந்த ஹோண்டா எஸ்யூவி காருக்கு விற்பனையில் ஃபோக்ஸ்வேகன் டி-ராக், ஸ்கோடா கரோக் மற்றும் ஜீப் காம்பஸ் கார்கள் போட்டியாக விளங்கவுள்ளன.