புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி வெளியீடு... கியா செல்டோஸ் போட்டியாளர்!

கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு நேர் போட்டியாக எதிர்பார்க்கப்படும் ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி வெளியீடு... கியா செல்டோஸ் போட்டியாளர்!

இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த சந்தையில் உள்ள வர்த்தக வளத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு அனைத்து நிறுவனங்களும் தீவிர முயற்சிகளை செய்து வருகின்றன. அந்த வகையில், ஹோண்டா கார் நிறுவனமும் இந்த சந்தையில் புதிய மாடலை களமிறக்குவது குறித்து தீவிர பரிசீலனையில் உள்ளது.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி வெளியீடு... கியா செல்டோஸ் போட்டியாளர்!

அந்த வகையில், வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள தனது எச்ஆர்வி என்ற புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்குவதற்கு திட்டம் வைத்துள்ளது. பல நாடுகளில் இந்த எஸ்யூவி வெஸல் என்ற பெயரிலும் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி வெளியீடு... கியா செல்டோஸ் போட்டியாளர்!

இந்த நிலையில், இந்த எஸ்யூவியை முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மூன்றாம் தலைமுறை மாடலாக வெளியிடப்பட்டு இருக்கும் இந்த புதிய எஸ்யூவி மாடலானது மிக மெல்லிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், அதனுடன் சேர்த்து கொடுக்கப்பட்ட எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி வெளியீடு... கியா செல்டோஸ் போட்டியாளர்!

இந்த எஸ்யூவியின் கூரை அமைப்பு கூபே கார்களை போன்ற தோற்றதுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவு கைப்பிடிகள் சி பில்லரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் போன்றே, டெயில் லைட் க்ளஸ்ட்டர்களும் மிக மெல்லியதாகவும் ஆங்கில எழுத்து U வடிவிலான தோற்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், பின்புற கதவில் எல்இடி லைட் பார் கொடுக்கப்பட்டு இருப்பதும் மிக முக்கிய விஷயமாக இருக்கிறது.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி வெளியீடு... கியா செல்டோஸ் போட்டியாளர்!

ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியின் டேஷ்போர்டு மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃப்ளோட்டிங் வகை தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு டயல்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்லது. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், ஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் ஆகியவை உள்ளன.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி வெளியீடு... கியா செல்டோஸ் போட்டியாளர்!

ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியில் ஹோண்டா 'சென்சிங் டெக்' என்ற பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன. இதில், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், கொலிஷன் மிட்டிகேஷன் பிரேக்கிங், லேன் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் போக்குவரத்து குறியீடுகளை கண்டறியும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி வெளியீடு... கியா செல்டோஸ் போட்டியாளர்!

உலக அளவில் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் பெட்ரோல்- எலெக்ட்ரிக் ஹைப்ரிட் மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் அல்லது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கும்.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி வெளியீடு... கியா செல்டோஸ் போட்டியாளர்!

வரும் ஏப்ரல் மாதம் ஜப்பானில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு செல்லும். முந்தைய தலைமுறை மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், அந்த திட்டத்தை ஹோண்டா கைவிட்டது. எனினும், தற்போது மிட்சைஸ் எஸ்யூவி கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், ஹோண்டா நிறுவனம் புதிய தலைமுறை எச்ஆர்வி எஸ்யூவியை கொண்டு வர அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
Japanese car maker, Honda has revealed new gen HR-V SUV and it will be launched in Japan by April this year.
Story first published: Friday, February 19, 2021, 10:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X