Just In
- 1 hr ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முண்டியடிக்கும் வாடிக்கையாளர்கள் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு புக்கிங் கொட்டுகிறது... டிசம்பரிலும் ஏகபோகம
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு புக்கிங் கொட்டோ கொட்டு என கொட்டி வருகிறது. காத்திருப்பு காலம் அதிகமாக இருந்தாலும், கடந்த டிசம்பர் மாதத்திலும் வாடிக்கையாளர்கள் முண்டியடித்து புக்கிங் செய்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 2ந் தேதி புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தோற்றத்தில் பிரம்மாண்டமாகவும், அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் வந்த இந்த காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மஹிந்திரா நிறுவனமே எதிர்பார்க்காத வகையில் புக்கிங் குவிந்து வருகிறது. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் முன்பதிவு குவிந்ததால், புக்கிங் செய்பவர்களுக்கு தார் எஸ்யூவியை டெலிவரி கொடுக்க பல மாதங்கள் ஆகும் நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில், மஹிந்திரா தார் எஸ்யூவியை புக்கிங் செய்து வாங்கியே தீர வேண்டும் என்ற வேட்கையில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. ஆம், கடந்த மாதத்தில் மட்டும் 6,500 பேர் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை முன்பதிவு செய்துள்ளனர்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை டெலிவிரி பெறுவதற்கு 10 மாதங்கள் வரை காத்திருக்கும் நிலையிலும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து முண்டியடித்து புக்கிங் செய்து வருகின்றனர்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் எல்எக்ஸ் என்ற சொகுசு அம்சங்கள் அதிகம் கொண்ட மாடலின் வேரியண்ட்டுகளுக்குத்தான் அதிக முன்பதிவு வருகிறது. அதிலும், குறிப்பாக, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலுக்கு பெரும்பான்மையான புக்கிங் கிடைத்து வருவதாக மஹிந்திரா தெரிவிக்கிறது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்திலேயே 20,000 யூனிட்டுகள் என்ற மைல்கல்லை புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு கிடைத்தது. இந்த நிலையில், புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு கிடைத்து வரும் வரவேற்பு குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி ராஜேஷ் ஜெஜுரிகர் கூறுகையில்," எதிர்பார்த்ததைவிட தார் எஸ்யூவிக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

குறிப்பாக, 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலுக்கு 50 சதவீதம் அளவுக்கு புக்கிங் கிடைத்துள்ளது. எனினும், மூலப்பொருட்கள், உதிரிபாகங்கள், மின்னணு சாதனங்களின் சப்ளையில் இருக்கும் தட்டுப்பாடு காரணமாக, சில சவால்களை சந்தித்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் ஆகிய இரண்டு மாடல்களில் பல வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. மேலும், பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளிலும் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் 152 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 2.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 132 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி ரூ.11.90 லட்சம் முதல் ரூ.13.75 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த நிலையில், விலை குறைவான ஏஎகஸ் வேரியண்ட்டுகளுக்கு வரும் மே மாதம் வரை புக்கிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.