Just In
- 54 min ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 8 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 10 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 13 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செமிகண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை... புதிய தலைமுறை எக்ஸ்யூவி500, ஸ்கார்பியோ அறிமுகம் தள்ளி போகிறது?
செமிகண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால், புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ கார்களின் அறிமுகம் தள்ளி போகலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ எஸ்யூவிக்களின் புதிய தலைமுறை மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும். இதில், புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவி நடப்பாண்டின் மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

அதே சமயம் புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டின் இரண்டாவது பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இந்த இரண்டு எஸ்யூவிகளின் அறிமுகமும் தள்ளிப்போகலாம் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. செமிகண்டக்டர்களுக்கு உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுதான் இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இசியூ அல்லது எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட்களை (ECU - Electronic Control Unit) உற்பத்தி செய்வதற்கு, இந்த செமிகண்டக்டர் சிப்கள் பயன்படுகின்றன.

அத்துடன் வாகனங்களின் இன்னும் பல்வேறு மின்னணு செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் மற்ற எலெக்ட்ரானிக்குகளை உற்பத்தி செய்வதற்கும், செமிகண்டக்டர் சிப்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த பிரச்னையால் மஹிந்திரா நிறுவனம் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளது என கூற முடியாது. உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் தற்போது இந்த பிரச்னையால் தடுமாறி வருகின்றன.

வாகனங்களின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இசியூ ஆகியவற்றுக்கு இந்த சிப்கள் மிகவும் முக்கியமானது. இந்த பாகங்கள் இல்லாமல், கார்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முடியாது. செமிகண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக, ஏற்கனவே மஹிந்திரா மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருப்பதற்கு இந்த பிரச்னைதான் காரணம். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய தார் எஸ்யூவிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதும், முன்பதிவுகள் குவிந்து வருவதும் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் செமிகண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால், மஹிந்திரா நிறுவனத்தால் புதிய தார் எஸ்யூவியை வாடிக்கையாளர்களுக்கு சரியாக டெலிவரி செய்ய முடியவில்லை. இந்த சூழலில், செமிகண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை தொடரும் என மஹிந்திரா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

எனவேதான் புதிய கார்களை அறிமுகம் செய்வதை தற்போதைக்கு தள்ளி வைக்க மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு ஏற்பட்டதை போன்ற டெலிவரி பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என மஹிந்திரா நிறுவனம் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.