புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 அறிமுகம் குறித்த தகவல் வெளியானது

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற விபரம் வெளியாகி இருக்கிறது. மஹிந்திரா உயர் அதிகாரி புதிய எக்ஸ்யூவி500 அறிமுகம் குறித்த விபரத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

 புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 அறிமுகம் குறித்த தகவல் வெளியானது

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த 7 சீட்டர் தேர்வாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் கனவு மாடலாக தொடர்ந்து தன்னை தக்க வைத்து வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு கடும் சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

 புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 அறிமுகம் குறித்த தகவல் வெளியானது

சந்தைப் போட்டி, கால மாற்றத்திற்கு தக்கவாறு மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு துவக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய மாடலின் அறிமுகம் தொடர்ந்து தள்ளிப் போய் வருகிறது.

 புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 அறிமுகம் குறித்த தகவல் வெளியானது

இந்த நிலையில், ஓர் ஆண்டுக்கு மேல் தாமதமான நிலையில், புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அறிமுகம் குறித்த உருப்படியானத் தகவல் கிடைத்துள்ளது. பவர்டிரிஃப்ட் யூ-ட்யூப் சேனலுக்கு மஹிந்திரா தலைமை செயல் அதிகாரி வீஜே நக்ரா பேட்டி அளித்துள்ளார்.

 புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 அறிமுகம் குறித்த தகவல் வெளியானது

அதில், புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவி நடப்பு ஆண்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். அதாவது, பண்டிகை காலத்திற்கு முன்னதாக புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது.

 புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 அறிமுகம் குறித்த தகவல் வெளியானது

புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 வடிவமைப்பில் முற்றிலும் புதிய மாடலாக மாறி இருக்கிறது. மேலும், ADAS தொழில்நுட்பம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய பல நவீன தொழில்நுட்பங்களுடன் அசத்த வருகிறது.

 புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 அறிமுகம் குறித்த தகவல் வெளியானது

பனோரமிக் சன்ரூஃப், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், வென்டிலேட்டட் இருக்கைகள், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்- ஸ்டாப் வசதிகளுடன் ஜமாய்க்க வருகிறது.

 புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 அறிமுகம் குறித்த தகவல் வெளியானது

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பார்க்கிங் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஏராளமான வசதிகள் இடம்பெற உள்ளது.

 புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 அறிமுகம் குறித்த தகவல் வெளியானது

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் எம்-ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
According to Mahindra official, ne gen XUV500 SUV will be launched before festive season in India.
Story first published: Sunday, April 4, 2021, 11:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X