Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய தலைமுறை மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!
புதிய தலைமுறை மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி உலக அளவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவியின் படங்கள், முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

புதிய நிஸான் ரோக் எஸ்யூவி உருவாக்கப்பட்ட அதே கட்டமைப்புக் கொள்கையில்தான் இந்த புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை க்ராஸ்ஓவர் டிசைன் தாத்பரியங்களை கொண்டிருந்த இந்த மாடல் தற்போது எஸ்யூவி ஸ்டைலுக்கு மாறி இருக்கிறது.

புதிய அவுட்லேண்டர் எஸ்யூவியின் டிசைன் மிகவும் தனித்துவமாக உள்ளது. பம்பர் அமைப்பில் மிகப்பெரிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் பார்த்தவுடன் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். பானட்டை ஒட்டி, மெல்லிய எல்இடி பகல்நேர விளக்குகள், பெரிய க்ரில் அமைப்பு, ஸ்கிட் ப்ளேட் ஆகியவை எஸ்யூவிகளுக்கு உரிய பிரம்மாண்டத்தை வழங்குகிறது.

இந்த காரில் டியூவல் டோன் அலாய் வீல்கள், வலிமையான பாடி லைன்கள், செவ்வக வடிவிலான தோற்றத்துடன் பக்கவாட்டு டிசைன் கவர்கிறது. பின்புறத்தில் மெல்லிய டெயில் லைட்டுகளுடன் கவர்கிறது.

உட்புறத்தில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு அமைப்பு மிக எளிமையாகவும், நேர்த்தியாகவும் உள்ளது. ஏசி வென்ட்டுகள் படுக்கை வாட்டு அமைப்புடன் டிசைன் செய்யப்பட்டு இருக்கின்றன. டேஷ்போர்டில் 9 அங்குல தொடுதிரை சாதனம் நடுநாயகமாக வீற்றிருக்கிறது.

இந்த காரில் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10.8 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, போஸ் ஆடியோ சிஸ்டம், 3 ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 181 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்டெப் சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. தவிரவும், நார்மல், டார்மாக், ஸ்னோ, கிராவல் மற்றும் மட் என சாலை நிலைகளுக்கு தக்கவாறு பயன்படுத்துவதற்கு 5 விதமான டிரைவிங் மோடுகள் உள்ளன.

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியில் மை பைலட் அசிஸ்ட் என்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப்பிங் அசிஸ்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதுதவிர்த்து, 11 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

முந்தைய தலைமுறை மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே பாணியில், இந்த புதிய மாடலை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து மிட்சுபிஷி என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.