புதிய தலைமுறை ஆக்டேவியா அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

புதிய தலைமுறை ஆக்டேவியா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறித்து அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி புதியத் தகவலை வெளியிட்டுள்ளார். அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஆக்டேவியா அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

இந்தியாவின் எக்ஸ்கியூட்டிவ் செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக ஸ்கோடா ஆக்டேவியா கார் இருந்து வருகிறது. இந்த காருக்கு இந்தியாவில் தனி ரசிக பட்டாளமும் உள்ளது. இந்த நிலையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் நான்காம் தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஆக்டேவியா அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

இந்த புதிய தலைமுறை ஆக்டேவியா காரின் வருகையை இந்திய வாடிக்கையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கொரோனாவால் தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த காரின் அறிமுகத்தை ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஸாக் ஹொல்லிஸ் உறுதிப்படுத்தினார். அதாவது, இரண்டு மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

புதிய தலைமுறை ஆக்டேவியா அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

இந்த நிலையில், தற்போது புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் வரும் ஏப்ரல் மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா காரை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியர்களுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய தலைமுறை ஆக்டேவியா அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த புதிய நான்காம் தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் ஸ்கோடா நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் சில முக்கிய மாறுதல்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன், பரிமாணத்திலும் சற்றே பெரிய மாடலாக மாற்றம் கண்டுள்ளது.

புதிய தலைமுறை ஆக்டேவியா அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 10 அங்குல திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஷிஃப் பை வயர் தொழில்நுட்பம் கொண்ட டிஎஸ்ஜி கியர்பாக்ஸ், 2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய தலைமுறை ஆக்டேவியா அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

வெளிநாடுகளில் புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சின், 4 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மைல்டு ஹைப்ரிட் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது.

புதிய தலைமுறை ஆக்டேவியா அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஆக்டேவியா அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் ரூ.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் எலான்ட்ரா உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has confirmed that the 4th gen Octavia sedan car will be launched in India in end of April 2021.
Story first published: Saturday, March 20, 2021, 15:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X