Just In
- 1 hr ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 2 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 3 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 4 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
குட் நியூஸ்.. அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.. மே 1 முதல் சிறப்பு முகாம்.. தமிழக அரசு அறிவிப்பு
- Sports
அப்படியே நான் ஷாக்காயிட்டேன்... சாரி கேட்ட விராட் கோலி... என்ன இப்படி பண்ணிட்டாரு கிங் கோலி?
- Finance
ஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகள்.. ஜூலையில் அறிமுகம்..!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்து சூப்பர் நியூஸ்!
புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா காரின் உற்பத்தி இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் எக்ஸிகியூட்டிவ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ஆக்டேவியா கார் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. மேலும், ஆக்டேவியா காருக்கென்று இந்தியாவில் தனி வாடிக்கையாளர் வட்டமும் உள்ளது. கடந்த 2001ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை மிகச் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக, நான்காம் தலைமுறை மாடலாக ஸ்கோடா ஆக்டேவியா மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. தனது பாரம்பரிய அம்சங்களுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த கார் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக நீண்ட காலத தாமதத்திற்கு பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், இந்தியாவில் இந்த காரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள ஆலையில் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா காரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. முதல் கார் உற்பத்திப் பிரிவிலிருந்து வெளிவந்தது குறித்த படத்தை ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் முந்தைய மாடலைவிட 19 மிமீ கூடுதல் நீளமும், 15 மிமீ கூடுதல் அகலமும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், மிக சிறப்பான உட்புற இடவசதியை அளிக்கும்.

புதிய ஆக்டேவியா காரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், 17 அங்குல ரோட்டேர் ஏரோ அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்திய சாலை நிலைகளுக்கு தக்கவாறு கூடுதல் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டதாக எதிர்பார்க்கப்படுகிறது.

உட்புறத்தில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். 10 தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, கனெக்டெட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜர் வசதியுடன் வர இருக்கிறது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 எச்பி பவரை வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வில் வர இருக்கிறது. டீசல் மாடல் இருக்காது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் ரூ.18 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா சிவிக், ஹூண்டாய் எலான்ட்ரா மற்றும் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக அமையும்.