மீண்டும் இந்தியா வருகிறது ஸ்கோடா ஆக்டேவியா!! உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்...

மாசு உமிழ்வை அளவிடும் கருவிகளுடன் புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் இந்தியா வருகிறது ஸ்கோடா ஆக்டேவியா!! உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்...

ஐரோப்பாவில் விற்பனையில் உள்ள புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த செடான் கார் இந்த 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகலாம் என ஸ்கோடா இந்தியாவின் இயக்குனர் ஜாக் ஹோல்லிஸ் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இந்தியா வருகிறது ஸ்கோடா ஆக்டேவியா!! உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்...

டிவிட்டரில் நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஜாக் ஹோல்லிஸ் இவ்வாறு கூறியுள்ளார். இருப்பினும் புதிய ஆக்டேவியாவின் இந்திய வருகை தாமதமாகியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் வைரஸ் பரவல் இல்லையென்றால் இந்த கார் கடந்த 2020ஆம் ஆண்டிலேயே அறிமுகமாக வேண்டியது.

மீண்டும் இந்தியா வருகிறது ஸ்கோடா ஆக்டேவியா!! உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்...

முந்தைய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்படாததினால் விற்பனை நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பிஎஸ்6 என்ஜின்களை பெற்றுவரும் புதிய ஆக்டேவியா இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டங்களிலும் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

மீண்டும் இந்தியா வருகிறது ஸ்கோடா ஆக்டேவியா!! உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்...

இந்த வகையில் தற்போது மீண்டும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா மாசு உமிழ்வை அளவிடும் கருவிகளுடன் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்கள் ரஷ்லேன் செய்திதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மீண்டும் இந்தியா வருகிறது ஸ்கோடா ஆக்டேவியா!! உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்...

விற்பனையில் இருந்த சமயத்தில் இந்திய ப்ரீமியம் செடான் கார் பிரிவில் வேகமாக பிரபலமான ஸ்கோடா ஆக்டேவியா அதன் கவர்ச்சிகரமான தோற்றத்தால் அதிகளவில் ரசிகர்களை பெற்றுள்ளது. ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் எம்க்யூபி ப்ளாட்ஃபாரத்தின் அப்டேட் வெர்சனில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஆக்டேவியா அதன் முந்தைய தலைமுறையை காட்டிலும் நீளமானது மற்றும் அகலமானது.

மீண்டும் இந்தியா வருகிறது ஸ்கோடா ஆக்டேவியா!! உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்...

இதனால் உட்புற கேபினும் விசாலமாகியுள்ளது. புதிய ஆக்டேவியாவின் உட்புறத்தில் விர்டியுவல் காக்பிட், தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பல எண்ணிக்கையில் காற்றுப்பைகள், 3-நிலை க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் மற்ற சில ப்ரீமியம் வசதிகளுடன் முற்றிலும் புத்துணர்ச்சியானதாக மாற்றப்பட்டிருக்கும்.

மீண்டும் இந்தியா வருகிறது ஸ்கோடா ஆக்டேவியா!! உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்...

புதிய ஸ்கோடா ஆக்டேவியாவில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போசார்ஜ்டு நேரடி இன்ஜெக்‌ஷன் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. அதிகப்பட்சமாக 190 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் முன் சக்கரங்களை இயக்கும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

மீண்டும் இந்தியா வருகிறது ஸ்கோடா ஆக்டேவியா!! உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்...

அதேநேரம் விலை குறைவான வேரியண்ட்கள் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் உடன் வழங்கப்படலாம். இதே என்ஜின் தேர்வில்தான் ஸ்கோடாவின் புதிய விஷன் இன் கான்செப்ட் எஸ்யூவி காரும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரும் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
New Skoda Octavia Spied With Emission Test Equipment – Launch By June 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X