தாமதமாகும் இரண்டாம் தலைமுறை டெஸ்லா ரோட்ஸ்டரின் வருகை!! சைபர் ட்ரக்கில் ஆர்வம் காட்டும் எலான் மஸ்க்

இரண்டாம் தலைமுறை டெஸ்லா ரோட்ஸ்டர் கார் 2022ஆம் ஆண்டில்தான் வெளிவரும் என எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த காரில் வழங்கப்படவுள்ள அப்கிரேட்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

தாமதமாகும் இரண்டாம் தலைமுறை டெஸ்லா ரோட்ஸ்டரின் வருகை!! சைபர் ட்ரக்கில் ஆர்வம் காட்டும் எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பால் டெஸ்லா நிறுவனத்தின் அட்டவணையில் இரண்டாம் தலைமுறை ரோட்ஸ்டர் கார் இல்லை என்பது தெரிய வருகிறது.

தாமதமாகும் இரண்டாம் தலைமுறை டெஸ்லா ரோட்ஸ்டரின் வருகை!! சைபர் ட்ரக்கில் ஆர்வம் காட்டும் எலான் மஸ்க்

முதன்முதலாக 2017ல் அறிமுகப்படுத்த டெஸ்லா ரோட்ஸ்டரின் அடையாளமே அதன் கிட்டத்தட்ட 1000கிமீ ரேஞ்ச் தான். அதுமட்டுமின்றி 0-வில் இருந்து 96kmph வேகத்தை வெறும் 1.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இதன் திறனும் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

தாமதமாகும் இரண்டாம் தலைமுறை டெஸ்லா ரோட்ஸ்டரின் வருகை!! சைபர் ட்ரக்கில் ஆர்வம் காட்டும் எலான் மஸ்க்

இப்படிப்பட்ட இந்த டெஸ்லா எலக்ட்ரிக் காரின் இரண்டாம் தலைமுறையின் வருகை கொரோனா பரவலினால் கடந்த இரு வருடங்களாக தாமதமாகி வருகிறது. கொரோனா மட்டுமின்றி சைபர் ட்ரக்கின் வருகையும் இதன் தாமதத்திற்கு காரணமாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

தாமதமாகும் இரண்டாம் தலைமுறை டெஸ்லா ரோட்ஸ்டரின் வருகை!! சைபர் ட்ரக்கில் ஆர்வம் காட்டும் எலான் மஸ்க்

இதுகுறித்த அவரது பதிவில், புதிய ரோட்ஸ்டரின் பொறியியல் பணிகள் இந்த ஆண்டில் முடிந்துவிடும். தயாரிப்பு பணிகள் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. 2022ன் கோடை காலத்திற்கு பிற்பகுதியில் இந்த காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

தாமதமாகும் இரண்டாம் தலைமுறை டெஸ்லா ரோட்ஸ்டரின் வருகை!! சைபர் ட்ரக்கில் ஆர்வம் காட்டும் எலான் மஸ்க்

ட்ரை-மோட்டார் ட்ரைவ் சிஸ்டம் மற்றும் அட்வான்ஸான பேட்டரி வேலை இதன் தயாரிப்பு பணிகளில் முக்கியமானதாக விளங்குகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது. டெஸ்லா ஏற்கனவே 0-வில் இருந்து 96kmph வேகத்தை 1.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய மாடல் எஸ் ப்ளாய்ட்+ காரை அறிமுகப்படுத்தி உள்ளது.

தாமதமாகும் இரண்டாம் தலைமுறை டெஸ்லா ரோட்ஸ்டரின் வருகை!! சைபர் ட்ரக்கில் ஆர்வம் காட்டும் எலான் மஸ்க்

இந்த வகையில் மாடல் எஸ்-இன் இந்த புதிய ஆற்றல்மிக்க வேரியண்ட் ரோட்ஸ்டரை பின்னுக்கு தள்ளியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதிய ரோட்ஸ்டரின் டாப் வேரியண்ட்களை அதிக வேகம் கொண்ட கார்களாக கொண்டுவரவுள்ளதாக எலான் தெரிவித்துள்ளார்.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Elon Musk Confirms 2nd Gen Tesla Roadster Has Been Delayed To 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X