பிரம்மாண்டம்... புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட்க்ரூஸர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

அட்டகாசமான தோற்றத்தில் புதிய தலைமுறைக்கு மாற்றப்பட்டுள்ள டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவி உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் குறித்த முக்கிய தகவல்கள், படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 பிரம்மாண்டம்... புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட்க்ரூஸர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

ஆஃப்ரோடு சொகுசு எஸ்யூவி கார்களில் உலக அளவில் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக டொயோட்டா லேண்ட்க்ரூஸர் இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டி மற்றும் கால மாற்றத்துக்கு தக்கவாறு வாடிக்கையாளர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியை டொயோட்டா நிறுவனம் உலக அளவில் வெளியிட்டுள்ளது.

 பிரம்மாண்டம்... புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட்க்ரூஸர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் 300 சீரிஸ் எஸ்யூவி டிஎன்ஜிஏ-எஃப் என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டமைப்பில் இலகு பாகங்களுடன் உருவாக்கப்பட்டு இருப்பதால், முந்தைய மாடலைவிட எடை 200 கிலோ அளவுக்கு குறைந்துள்ளது.

 பிரம்மாண்டம்... புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட்க்ரூஸர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவியின் எடை குறைந்துள்ளதுடன், சிறப்பான எடை பரவல் விகிதத்துடன் அதிக நிலைத்தன்மையுடன் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

 பிரம்மாண்டம்... புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட்க்ரூஸர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவியானது பெட்டி போன்ற தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் பார்வையிலேயே தனது பிரம்மாண்டத் தோற்றத்துடன் வசீகரிக்கிறது. பிரம்மாண்டமான முகப்பு க்ரில் அமைப்பு, ட்ரை பீம் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், வலிமையான பானட் அமைப்பு ஆகியவை ஈர்ப்பதாக உள்ளன.

 பிரம்மாண்டம்... புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட்க்ரூஸர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த எஸ்யூவியில் 18 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளன. மேலும், வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் பேரில் 19 அங்குல அல்லது 20 அங்குல சக்கரங்களை தேர்வு செய்ய முடியும். ரூஃப் ரெயில்கள், புதிய வடிவிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

 பிரம்மாண்டம்... புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட்க்ரூஸர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த எஸ்யூவியில் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கனெக்டெட் கார் தொழில்நுட்பத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜர், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்டவை முக்கிய வசதிகளாக உள்ளன.

 பிரம்மாண்டம்... புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட்க்ரூஸர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த எஸ்யூவியின் மூன்று வரிசை இருக்கைகளிலும் பிரிமீயம் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டுள்ளது. வெதுவெதுப்பான உணர்வு மற்றும் காற்றோட்டத்தை வழங்கும் இருக்கைகளுடன் வாடிக்கையாளர்களுக்கு சொகுசான பயண அனுபவத்தை வழங்கும்.

 பிரம்மாண்டம்... புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட்க்ரூஸர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவியில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளது. இதன் 3.5 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி6 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 409 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 3.3 லிட்டர் ட்வின் டர்போ வி6 டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 304 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

 பிரம்மாண்டம்... புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட்க்ரூஸர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவி சந்தைக்கு வந்து 70 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை 10.4 மில்லின் யூனிட்டுகள் உலகின் 170 நாடுகளில் விற்பனை ஆகி உள்ளது. இந்தியாவிலும் இந்த எஸ்யூவி அரசியல்வாதிகள் மற்றும் பெரும் கோடீஸ்வரர்களின் தேர்வாக இருந்து வருகிறது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota has revealed new generation Land Cruiser (300 series) SUV globally. Read in Tamil.
Story first published: Thursday, June 10, 2021, 12:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X