டொயோட்டா லேண்ட் க்ரூஸர் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனிற்கு இதுவே சான்று!! வீடியோ

புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட் க்ரூஸரின் ஆஃப்-ரோடு திறன் புதிய அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றின் மூலமாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனிற்கு இதுவே சான்று!! வீடியோ

முன்னணி ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸரை (300 சீரிஸ்) சில மாதங்களுக்கு முன் சர்வதேச சந்தைகளில் வெளியிட்டது. டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மாடலை பற்றி தெரியாதவர்கள் மிகவும் குறைவானவர்களே இருப்பீர்கள்.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனிற்கு இதுவே சான்று!! வீடியோ

ஏனெனில் அந்த அளவிற்கு டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸர் வாகனங்களுக்கு ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இதன் ஆஃப்-ரோடு திறனை விரும்பாத வாடிக்கையாளரே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். புதிய 300 சீரிஸ் மாடல் இத்தகைய வாகனத்தின் ஆயுட்காலத்தை மேலும் நீட்டிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனிற்கு இதுவே சான்று!! வீடியோ

முந்தைய மாடலை காட்டிலும் குறைவான எடையில், அதேநேரம் வலுவானதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸரில் ஏகப்பட்ட ஆஃப்-ரோடு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் எல்சி300 தொடர்பான வீடியோ ஒன்றினை டொயோட்டா நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

இந்த எஸ்யூவி காரின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள மேலுள்ள வீடியோவில், லேண்ட் க்ருஸர் வாகனம் நீர்நிலையில் இறங்குவது, மலை தொடரில் ஏறுவது மற்றும் மணலில் இயங்குவது என வெவ்வேறான ஆஃப்-ரோடு சவால்களை எதிர்கொள்வதை பார்க்க முடிகிறது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனிற்கு இதுவே சான்று!! வீடியோ

இந்த வீடியோ முழுக்க முழுக்க ஜப்பானிய மொழியில் இயங்குகிறது. அதுமட்டும் தான் ஒரே குறை. பெரிய அளவிலான தோற்றத்தை கொண்டிருந்தாலும், குன்றுகளின் மீது இந்த லேண்ட் க்ரூஸர் வாகனம் எந்தவொரு பயமுமின்றி தைரியமாக குதித்து குதித்து செல்கிறது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனிற்கு இதுவே சான்று!! வீடியோ

இந்த வீடியோ வெறும் 1.15 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது. இருப்பினும் இதில் இந்த டொயோட்டா எஸ்யூவி வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனை தெளிவாக வெளிக்காட்டியுள்ளனர். புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸரில் இரு விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனிற்கு இதுவே சான்று!! வீடியோ

இதில் ஒன்றான 3.5 லிட்டர், இரட்டை-டர்போ, வி6 பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 409 பிஎஸ் மற்றும் 650 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதுவே இரண்டாவது என்ஜின் தேர்வான 3.3 லிட்டர், இரட்டை-டர்போ, வி6 டீசல் என்ஜின் ஆனது 305 பிஎஸ் மற்றும் 700 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு வழங்குகிறது. ஆனால் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் ஒன்றே-10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மட்டுமே.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனிற்கு இதுவே சான்று!! வீடியோ

இது இந்த இரு என்ஜின்களின் ஆற்றலை காரின் அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பிற்கு வழங்குகிறது. இத்துடன் டோர்சன் பின்பக்க லிமிடெட் ஸ்லிப் டிஃப்ரென்ஷியல், மல்டி-டெரைன் மானிட்டர், ஆஃப்-ரோடு டிஸ்ப்ளே, மின்னணு-இயக்கவியல் டைனமிக் சஸ்பென்ஷன் அமைப்பு, எலக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் லாக் போன்றவற்றுடன் விருப்பமான 12.3 இன்ச் திரை போன்றவையும் புதிய லேண்ட் க்ரூஸரில் வழங்கப்படுகின்றன.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனிற்கு இதுவே சான்று!! வீடியோ

முந்தைய தலைமுறை உடன் ஒப்பிடுகையில் புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸர் வெளிப்பக்கம் உட்புறம் என இரு பக்கங்களிலும் கவனிக்கத்தக்க அப்கிரேட்களை பெற்றுவந்துள்ளது. புதிய டிஎன்ஜிஏ-எஃப் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டாலும், வழக்கமான பாடி-ஆன்-ஃப்ரேம் வடிவமைப்பையே மீண்டும் இந்த டொயோட்டா கார் தொடர்ந்துள்ளது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனிற்கு இதுவே சான்று!! வீடியோ

இருப்பினும் புதிய கட்டமைப்பினால் காரின் ஒட்டு மொத்த வலிமையும் அதிகரித்துள்ளதுடன், வாகனத்தின் ஈர்ப்பு விசை மையமும் தாழ்வாகியுள்ளது. அதுமட்டுமின்றி வாகனத்தின் எடையும் 200 கிலோ வரையில் குறைந்துள்ளது. இருப்பினும் காரின் பரிணாம அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனிற்கு இதுவே சான்று!! வீடியோ

புதிய தொழிற்நுட்பங்களாக இ-கேடிஎஸ்எஸ் (எலக்ட்ரிக் இயக்கவியல் டைனாமிக் சஸ்பென்ஷன் சிஸ்டம்) மற்றும் வெவ்வேறான ட்ரைவ் செலக்ட் மோட்கள் வாகனத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் புதிய டொயோட்டா எல்சி 300 மாடலின் மீது உலகளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனிற்கு இதுவே சான்று!! வீடியோ

குறிப்பாக ஜப்பான் நாட்டில் இந்த ஆஃப்-ரோட்டிற்கு இணக்கமான எஸ்யூவி வாகனத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் அங்கு இந்த எஸ்யூவி வாகனத்தை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய காலம் 12 மாதங்கள் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனிற்கு இதுவே சான்று!! வீடியோ

புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்கு செல்லவுள்ளது. ஆனால் இதில் முக்கியமான அமெரிக்கா இல்லை. இருப்பினும் இந்தியாவில் புதிய எல்சி300 விரைவில் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் சிபியூ முறையிலேயே விற்பனை செய்யப்படும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
New-Gen Toyota Land Crusier Shows Off-Road Skills In Video.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X