புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த மாடல்களில் ஒன்றாக ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் இருந்து வருகிறது. நேர்த்தியான டிசைன், சிறந்த கட்டுமானத் தரம், செயல்திறன் மிக்க எஞ்சின்களுடன் தனி வாடிக்கையாளர் வட்டத்தை வைத்துள்ளது. போட்டியாளர்களாக உள்ள ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

ஆனால், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் நீண்ட காலமாக எந்தவொரு பெரிய அளவிலான மேம்பாட்டு பணிகள் செய்யப்படாமல், விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வென்ட்டோ காரை புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தி கொண்டு வருவதற்கு ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

இதன்படி, இந்தியாவுக்கான சிறப்பம்சங்களுடன் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய தலைமுறை வென்ட்டோ கார் விர்டுஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

கடந்த சில மாதங்களாக புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் புதிய தலைமுறை வென்ட்டோ கார் அறிமுகம் செய்யப்படும் என்று ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆசிஷ் குப்தா கூறி இருக்கிறார். கார் அண்ட் பைக் தளத்தின் செய்தி வாயிலாக இந்த தகவல் வெளிவந்துள்ளது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி ஏ0 என்ற இந்தியாவுக்கான புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய வென்ட்டோ காரைவிட அளவில் பெரிய மாடலாக வர இருக்கிறது. டிசைனிலும் முற்றிலும் புதிய தளத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. அதாவது, புதிய தலைமுறை ரேபிட் கார் உருவாக்கப்படும் அதே கட்டமைப்புக் கொள்கையில்தான் இந்த காரும் வர இருக்கிறது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் 113 பிஎச்பி பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 148 பிஎச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாஸ் உள்ளிட்ட மிட்சைஸ் செடான் கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

English summary
Volkswagen has confirmed that the new generation Vento car will be launched in India by early next year.
Story first published: Thursday, March 25, 2021, 15:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X