விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்!

புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ காரின் உருமறைப்பு செய்யப்படாத புதிய ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்!

புதிய தலைமுறை செலிரியோ காரை மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சூழலில் உருமறைப்பு செய்யப்படாத நிலையில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஸ்பை படங்கள் முதல் முறையாக சமீபத்தில் வெளியாகியுள்ளன.

விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்!

இதன் மூலம் புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோவின் டிசைன் நமக்கு தெளிவாக தெரியவந்துள்ளது. விளம்பரத்திற்கு ஷூட்டிங் செய்யப்பட்டபோது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ காரை சிகப்பு மற்றும் நீல வண்ணங்களில் நம்மால் பார்க்க முடிகிறது.

விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்!

ஹார்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில் புதிய தலைமுறை செலிரியோ கட்டமைக்கப்பட்டுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. புதிய ஸ்பை படங்களை வைத்து பார்க்கையில் சந்தையை விட்டு வெளியேறவுள்ள மாடலுடன் ஒப்பிடுகையில், முற்றிலும் புதிய டிசைனை புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ பெற்றுள்ளது தெரியவருகிறது.

விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்!

டிசைன் மட்டுமல்லாது, பானெட்டிற்கு அடியிலும் புதிய தலைமுறை செலிரியோ மாற்றங்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ காரில் 1.2 லிட்டர் கே12 இன்ஜின் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இன்ஜின் ஏற்கனவே வேகன் ஆர் உள்ளிட்ட ஒரு சில கார்களில் வழங்கப்பட்டு வருகிறது.

விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6000 ஆர்பிஎம்மில் 82 பிஎச்பி பவரையும், 4200 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ காரில் 1.0 லிட்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் புதிய இன்ஜின் தேர்வும் சேர்த்து விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்!

இந்த 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 6000 ஆர்பிஎம்மில் 68 பிஎச்பி பவரையும், 3500 ஆர்பிஎம்மில் 90 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இரண்டு இன்ஜின்களுடனும் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி தேர்வுகள் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் பெட்ரோல்-சிஎன்ஜி தேர்வையும் மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ந்து வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்!

1.0 லிட்டர் இன்ஜின் உடன் சிஎன்ஜி தேர்வு வழங்கப்படலாம். புதிய டிசைன் காரணமாக, சந்தையை விட்டு வெளியேறவுள்ள மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ காரின் கேபின் விசாலமான இடவசதியை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக புதிய தலைமுறை செலிரியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்!

ஆனால் சந்தையை விட்டு வெளியேறவுள்ள மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ காரின் விலை சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இறுதி தயாரிப்பு நிலை மாடல் சாலைக்கு வந்து விட்ட காரணத்தால், புதிய தலைமுறை செலிரியோ வரும் வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image Courtesy: Tushar Kevadiya/Rushlane Spylane

Most Read Articles
English summary
New Generation Maruti Suzuki Celerio Spied Undisguised Ahead Of Launch; Check Details Here. Read in Tamil
Story first published: Monday, August 2, 2021, 13:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X