ஹைப்ரீட் தேர்வில் கொண்டுவரப்படும் Honda City செடான் கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

Honda City ஹைப்ரீட் காரின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஹைப்ரீட் தேர்வில் கொண்டுவரப்படும் Honda City செடான் கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

2020ஆம் ஆண்டின் பெரும்பான்மையான மாதங்கள் கொரோனா வைரஸில் கழிய, 2021ஆம் ஆண்டிலும் பாதி வருடம் வேகமாக கடந்துவிட்டது. தற்போதைய சூழலில் நாட்டில் பெட்ரோல் & டீசல் விலை உயர்வு முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றாக இருப்பதை மறுக்க இயலாது.

ஹைப்ரீட் தேர்வில் கொண்டுவரப்படும் Honda City செடான் கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

இதனை சமாளிக்க அரசாங்கமும் பழைய கார்கள் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் எதிரொலியாக எலக்ட்ரிக் வாகனங்களை பற்றிய பேச்சு அதிகரிக்க துவங்கியுள்ளது. எலக்ட்ரிக் வாகனம் தான் பலரது முடிவாக இருக்கிறதே தவிர்த்து, எரிபொருள் செலவை குறைக்கும் ஹைப்ரீட் வாகனங்களை பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை என்பது உண்மை நிலவரம்.

ஹைப்ரீட் தேர்வில் கொண்டுவரப்படும் Honda City செடான் கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

இதற்கு காரணம், தற்போதைக்கு சந்தையில் மலிவான விலையில் எந்தவொரு ஹைப்ரீட் காரும் விற்பனையில் இல்லாததே ஆகும். ஆனால் இந்த நிலை நீண்ட காலத்திற்கு இருக்க போவதில்லை. ஏனெனில் ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான Honda அதன் city செடான் காரின் ஹைப்ரீட் வெர்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஹைப்ரீட் தேர்வில் கொண்டுவரப்படும் Honda City செடான் கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

இதுதொடர்பாக Honda Cars India நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் துணை தலைவர் ராஜேஷ் கோயல் வாயிலாக நமக்கு தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, Honda City ஹைப்ரீட் கார் இந்திய சந்தையில் அடுத்த 2022ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்படலாம்.

ஹைப்ரீட் தேர்வில் கொண்டுவரப்படும் Honda City செடான் கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

அதாவது அடுத்த நிதியாண்டில் City ஹைப்ரீட் மாடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார். City செடானின் ஹைப்ரீட் வேரியண்ட்டை இந்த 2021ஆம் ஆண்டிற்குள் அறிமுகப்படுத்த Honda ஆரம்பத்தில் முடிவு செய்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலினால் இந்த திட்டம் தாமதமாகியுள்ளது.

ஹைப்ரீட் தேர்வில் கொண்டுவரப்படும் Honda City செடான் கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

இதுவும் ஒரு விதத்தில் நல்லதுக்கு தான். ஏனென்றால் இந்திய சாலைக்கு ஏற்ப இந்த ஹைப்ரீட் செடான் காரை பல்வேறு அளவுருக்களுக்கு நன்கு இணக்கமானதாக வடிவமைக்க Honda பொறியியலாளருக்கு கூடுதல் நேரம் கிடைத்துள்ளது. மேலும் சோதனை ஓட்டங்களையும் எந்தவொரு அவசர அவசரமுமின்றி மேற்கொள்ளலாம்.

ஹைப்ரீட் தேர்வில் கொண்டுவரப்படும் Honda City செடான் கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

இதுவரை நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி பார்க்கும்போது, Honda City ஹைப்ரீட் காரில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படலாம். இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 97 பிஎச்பி மற்றும் 127 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஹைப்ரீட் தேர்வில் கொண்டுவரப்படும் Honda City செடான் கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

மற்ற ஹைப்ரீட் கார்களை போல் அல்லாமல் Honda City ஹைப்ரீட் மாடலில் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் ஒன்று ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டராகவும் (ISG), மற்றொன்று முன்சக்கரங்களுக்கு ஆற்றலை வழங்கக்கூடியதாகவும் இருக்கும்.

ஹைப்ரீட் தேர்வில் கொண்டுவரப்படும் Honda City செடான் கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

முன் சக்கரங்களுக்கு இந்த எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 108 எச்பி வரையிலான ஆற்றலை சிங்கிள்-ஸ்பீடு நிலையான கியர்பாக்ஸ் வாயிலாக வழங்குமாம். ஆதலால் City ஹைப்ரீட் காரில் 200எச்பி வரையிலான இயக்க ஆற்றலை எதிர்பார்க்கலாம்.

ஹைப்ரீட் தேர்வில் கொண்டுவரப்படும் Honda City செடான் கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

ஆனால் டாப்-ஸ்பீடை பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது என்றாலும், அன்றாட பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற வாகனமாக இந்த Honda ஹைப்ரீட் கார் இருக்கும் என்பது மட்டும் உறுதி. இதற்கிடையில் 31XA என்ற குறியீட்டு பெயரில் இந்திய சந்தைக்கான நடுத்தர-அளவு எஸ்யூவி கார் ஒன்றினையும் Honda சார்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹைப்ரீட் தேர்வில் கொண்டுவரப்படும் Honda City செடான் கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

இந்தியாவில் நடுத்தர-அளவு எஸ்யூவி கார் பிரிவே மிகுந்த போட்டி மிகுந்ததாக உள்ளதால், Honda-வின் இந்த எஸ்யூவி கார் புதிய platform-த்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட உள்ளது. இதனால் இந்த எஸ்யூவி காரின் மூலம் இந்திய சந்தையில் தனது பங்கை அதிகப்படுத்த Honda தயாராகி வருகிறது.

ஹைப்ரீட் தேர்வில் கொண்டுவரப்படும் Honda City செடான் கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

தற்போதைக்கு இந்திய சந்தையில் Honda பயணிகள் கார்களை அதிகளவில் விற்பனை செய்யும் பிராண்டாக இல்லாவிடினும், இவ்வாறான, கவர்ச்சிகரமான புதிய தயாரிப்புகளினால் எதிர்காலத்தில் நம் நாட்டு சந்தையில் வலுவான இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
Honda City Hybrid will Launching In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X