Just In
- 37 min ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 46 min ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 1 hr ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 2 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- Sports
கண் அசைவிற்காக காத்திருக்கும் 3 பேர்.. "தமிழர்களை" புறக்கணிக்கும் தோனி.. நேற்று நடந்த பரபர சம்பவம்
- Movies
எவனாவது குழிப்பறிச்சா கோபம் வரும்… இவரு குழிப்பறிச்சா மரியாதை வருது… விவேக் பற்றி விஜய் பேசிய வீடியோ!
- News
''சமூக பிரச்சினைக்கு குரல் கொடுத்தவர் விவேக்''.. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
- Lifestyle
தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான பாலியல் நடைமுறைகள்... இந்தியாவிலுமா இப்படி நடக்குது?
- Finance
சிறு தொழிற்சாலைகளை சூறையாடும் லாக்டவுன்.. கோவை நிறுவனத்தின் உண்மை நிலை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய ஹோண்டா எச்ஆர்வி ஹைப்ரிட் மாடல் இந்திய அறிமுக விபரம்!
புதிய ஹோண்டா எச்ஆர்வி ஹைப்ரிட் எஸ்யூவி மாடல் இந்திய அறிமுகம் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், இந்த சந்தையில் புதிய மாடல்களை களமிறக்குவதற்கு அனைத்து நிறுவனங்களும் முனைப்புடன் செயலாற்றி வருகின்றன. அந்த வகையில், ஹோண்டா கார் நிறுவனம் புதிய எச்ஆர்வி ஹைப்ரிட் மாடலை இந்த சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி மாடலானது ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் வருவதுதான் பலரின் கவனத்தை ஈர்க்கும் விஷயமாக அமைந்துள்ளது. இந்த புதிய மாடலானது வெஸல் என்ற பெயரில் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. மிக நீண்ட காலமாக இந்திய சந்தையில் வரும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு எப்படியும் இந்த கார் வந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

அதாவது, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் புதிய ஹோண்டா எச்ஆர்வி ஹைப்ரிட் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டீம் பிஎச்பிதளத்தின் உறுப்பினர் வாயிலாக வெளிவந்துள்ள செய்தி தெரிவிக்கிறது.

இந்த புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டு மின் மோட்டார்களுடன் இயங்கும் ஹைப்ரிட் மாடலாக வர இருக்கிறது. இதன் பெட்ரோல் எஞ்சின் 97 பிஎச்பி பவரையும், 127 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் பெட்ரோல் எஞ்சினுடன் இணைந்து செயல்படும் இன்டகிரேடட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டராகவும் மற்றொன்று முன்புற ஆக்சிலிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த முன்புற ஆக்சிலில் இருக்கும் மின் மோட்டார் மட்டும் 108 பிஎச்பி பவரையும், 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இந்த காரில் பெட்ரோல், ஹைபிரிட் மோடு மற்றும் மின் மோட்டாரில் மட்டும் இயங்கும் விதத்தில் மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன. சூழலுக்கு தக்கவாறு இந்த டிரைவிங் மோடுகளை பயன்படுத்த முடியும்.

கடந்த மாதம் தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவிதான் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. ஆனால், இந்தியாவுக்காக சில சிறிய மாற்றங்களுடன் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த கார் 4,450 மிமீ நீளமும், 1,780 மிமீ அகலமும், 1,600 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும். மேலும், 2,630 மிமீ வீல்பேஸ் நீளத்தை பெற்றிருக்கும். 185 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் பெற்றிருக்கும். இது க்ராஸ்ஓவர் டிசைனில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டைனமிக் இன்டிகேட்டர்கள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

இந்த புதிய எஸ்யூவி ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் வர இருப்பதால், ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது, போட்டியாளர்களாக கருதப்படும் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களைவிட பிரிமீயம் மாடலாகவும், விலை அதிகம் கொண்டதாகவும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.