ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி பொது பார்வைக்கு வரும் தேதி விபரம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ள தேதி விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி பொது பார்வைக்கு வரும் தேதி விபரம்!

ஹூண்டாய் க்ரெட்டா அடிப்படையிலான 7 சீட்டர் எஸ்யூவி மாடலாக அல்கஸார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த எஸ்யூவி இந்திய கார் பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 6ந் தேதி புதிய அல்கஸார் எஸ்யூவி ராஜஸ்தானில் வைத்து பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக டீம் பிஎச்பி தள செய்தி தெரிவிக்கிறது.

ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி பொது பார்வைக்கு வரும் தேதி விபரம்!

இதைத்தொடர்ந்து வரும் மே மாதம் புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிஇந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த எஸ்யூவி 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வெளிவர உள்ளது. 6 சீட்டர் மாடலில் இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகளும், 7 சீட்டர் மாடலில் பெஞ்ச் வகை இருக்கை அமைப்பும் இருக்கும்.

ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி பொது பார்வைக்கு வரும் தேதி விபரம்!

க்ரெட்டா எஸ்யூவியின் அடிப்படையிலான மாடல் என்பதால், முகப்பில் சில ஒற்றுமைகள் இருக்கும். கூடுதல் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய மாடலானது பக்கவாட்டிலும், பின்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி பொது பார்வைக்கு வரும் தேதி விபரம்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் தேர்வுகள்தான் புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியிலும் இடம்பெற்றிருக்கும். இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் வரும்.

ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி பொது பார்வைக்கு வரும் தேதி விபரம்!

இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.

ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி பொது பார்வைக்கு வரும் தேதி விபரம்!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்ம், வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், 6 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோ்ல உள்ளிட்ட வசதிகள் இருக்கும். 360 டிகிரி பார்க்கிங் கேமரா வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி பொது பார்வைக்கு வரும் தேதி விபரம்!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ரூ.11 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் டாடா சஃபாரி, மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்களுக்கு கடும் போட்டியை தரும்.

ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி பொது பார்வைக்கு வரும் தேதி விபரம்!

விலை அடிப்படையில் மிகச் சிறந்த தேர்வாக ஹூண்டாய் அல்கஸார் இருக்கும் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது எஸ்யூவி மாடல்களுக்கு மட்டுமில்லாமல், மாருதி எர்டிகா எம்பிவி காருக்கும் கடும் போட்டியை தரும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles

English summary
According to report, Hyundai is planning to reveal all new Alcazar in India on April 6, 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X