ரஷ்யாவில் அறிமுகமானது புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி... இந்தியா வருமா, வராதா?

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் முக அமைப்பை ஒத்திருக்கும் வடிவமைப்புடன் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடல் விரைவில் இந்தியா வருமா என்ற கேள்வி இந்தியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கான பதில் மற்றும் ரஷ்ய மாடலின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ரஷ்யாவில் அறிமுகமான புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி... இந்தியா வருமா?

ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா எஸ்யூவி இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமான மாடலாக இருந்து வருகிறது. விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 எஸ்யூவி மாடலாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில், சில மாற்றங்களுடன் கூடிய புதிய க்ரெட்டா எஸ்யூவி ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ரஷ்யாவில் அறிமுகமான புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி... இந்தியா வருமா?

இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் முக வடிவமைப்பை இந்த புதிய க்ரெட்டா எஸ்யூவி பெற்றிருக்கிறது. அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவியில் இருப்பது போன்ற முகப்பு க்ரில் அமைப்பு, பம்பர் ஆகியவற்றுடன் வந்துள்ளது.

ரஷ்யாவில் அறிமுகமான புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி... இந்தியா வருமா?

இந்த புதிய க்ரெட்டா எஸ்யூவியில் ஏ மற்றும் சி பில்லர்களுக்கு மேலாக சில்வர் வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருந்த அலங்கார வளைவு உதிரிபாகம் புதிய மாடலில் கருப்பு நிறத்திற்கு மாறி இருக்கிறது. பின்புறத்திலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் அறிமுகமான புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி... இந்தியா வருமா?

ரஷ்யாவில் வந்துள்ள புதிய க்ரெட்டாவின் இன்டீரியர் கிட்டத்தட்ட இந்தியாவில் விற்பனை செய்யப்படும் க்ரெட்டா எஸ்யூவியின் உட்புறத்தை போன்றே இருக்கிறது. ஆனால், பழுப்பு மற்றும் கருப்பு வண்ண இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அங்கு இடதுபக்க ஸ்டீயரிங் வீல் அமைப்புடன் விற்பனை செய்யப்படுகிறது.

ரஷ்யாவில் அறிமுகமான புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி... இந்தியா வருமா?

ரஷ்யாவில் வந்துள்ள மாடலில் முக்கிய அம்சமாக 148 எச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தவிர்த்து, 121 எச்பி பவரை வழங்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் உள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

ரஷ்யாவில் அறிமுகமான புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி... இந்தியா வருமா?

ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இந்தியா வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், அண்மையில் தென்கொரியாவில் வைத்து ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

ரஷ்யாவில் அறிமுகமான புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி... இந்தியா வருமா?

தென்கொரியாவில் சோதனை செய்யப்படும் மாடல்தான் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அடுத்த ஆண்டு க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த மாடலில் முகப்பில் முக்கிய மாற்றங்களுடன் கூடுதல் வசதிகளுடன் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வர இருக்கிறது.

Most Read Articles

English summary
Hyundai Motors has launched new Creta SUV with minor changes in Russia.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X