Just In
- 21 min ago
அதிக மைலேஜ் தரும் டாப்10 சப்-4மீ, க்ராஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தர கூடிய கார்கள் இந்தியாவில் இருக்கா!
- 1 hr ago
2021 ஃபோக்ஸ்வேகேன் போலோ கார் உலக அளவில் அறிமுகம்!
- 2 hrs ago
உலகளவில் ஃபேமஸான சுஸுகி ஹயபுஸா பைக் இந்தியா கொண்டுவரப்படுகிறது!! வருகிற 26ஆம் தேதி அறிமுகம்
- 3 hrs ago
மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்தது டிவிஎஸ்!! இ-ஸ்கூட்டர்களுக்கு தேவை அதிகரிக்கிறதா?
Don't Miss!
- Lifestyle
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- News
ம.பி.யில் மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்... கொரோனாவை விரட்ட தீப்பந்தம் ஏந்திய கிராம மக்கள்..!
- Movies
பிரமாண்டமா கொண்டாடல.. ஸ்பெஷல் சபதமும் இல்ல.. காதலியை கரம்பிடித்த கையோடு மனம் திறந்த விஷ்ணு விஷால்!
- Sports
சதத்திற்கு பின்னால் இப்படி ஒரு வலியா? மனம் உருகிய தேவ்தத் பட்டிக்கல்.. விவரம்!
- Finance
கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சென்செக்ஸ்.. கிட்டதட்ட 200 புள்ளிகள் சரிவு..!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரத்யேகமான பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்ட புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார்!! எந்த ஊரில் தெரியுமா?
பிரத்யேகமான பச்சை நிற பெயிண்ட் உடன் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபிகேஷனுக்கு ஆன தலைசுற்ற வைக்கும் செலவு உள்ளிட்ட விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்சமயம் அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி காராக விளங்கும் ஹூண்டாய் க்ரெட்டாவின் புதிய தலைமுறை கடந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போதில் இருந்து மாதத்திற்கு மாதம் குறைந்தது 10 ஆயிரம் க்ரெட்டா கார்களாவது விற்பனை செய்யப்பட்டு விடுகின்றன. இதனால் இப்போதெல்லாம் ஹூண்டாய் க்ரெட்டா கார்களை சாலையில் காண்பது சர்வ சாதாரணமானதாக உள்ளது.

இதன் காரணமாக தனது க்ரெட்டா கார் மற்ற க்ரெட்டா கார்களில் இருந்து தனித்து தெரிவதற்காக மாடிஃபிகேஷன் செய்வது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இந்த வகையிலான மாடிஃபை புதிய தலைமுறை க்ரெட்டா காரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
வைபர் ஷாட் என்ற யுடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் பிரத்யேகமான பச்சை நிற பெயிண்ட் வ்ராப்-ஐ பெற்ற ஹூண்டாய் க்ரெட்டா காரை பார்க்கலாம். இந்த பெயிண்ட்டிற்கு க்ரீன் மான்ஸ்ட்ர் வ்ராப் என பெயர் வைத்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆட்டோபான் விசாக் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாடிஃபிகேஷன் பணிகளினால் காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரு பக்கங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான கார்கள் பச்சை நிறத்தேர்வை கொண்டில்லாததால் க்ரீன் மான்ஸ்டர் வ்ராப்-ஐ பெற்றுள்ள இந்த ஹூண்டாய் க்ரெட்டா கார் நிச்சயம் சாலையில் செல்லும்போது எவர் ஒருவரையும் திரும்பி பார்க்க வைக்கும்.

இந்த பெயிண்ட் வ்ராப் ஆனது காரின் பாடி பேனல்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக ஒட்டப்பட்டுள்ளது. இதனால் கீறல்கள் விழுந்தாலும் அந்த பகுதி வ்ராப்-ஐ மட்டும் தனியாக உரித்து எடுக்க முடுயும். இந்த பெயிண்ட் வ்ராப்-ஐ பொறுத்தவரையில் கீறல்கள் விழுந்தாலும், பெரியளவில் தெரியாது என்பது வேறு விஷயம்.

காரின் மேற்கூரையிலும் வ்ராப் ஒட்டப்பட்டுள்ளது. வ்ராப்-ஐ ஒட்டுவதற்கு முன்பு க்ரெட்டா காரில் ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் அனைத்து க்ரோம் துண்டுகளும் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஜன்னல்களின் பார்டர் லைன்கள் மற்றும் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற பக்கவாட்டு கண்ணாடிகள் பளபளப்பான கருப்பு நிறத்தில் உள்ளதை பார்க்கலாம்.

அலாய் சக்கரங்கள் புதியதாக 18 இன்ச்சில் லென்சோ என்ற நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. காரின் முன்பகுதி கருப்பு நிற பாகங்களுடன் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப் மற்றும் ஃபாக் விளக்குகள் ஸ்மோக் எஃபெக்ட்டில் உள்ளன.

முன்பகுதியை போல் காரின் பின்பக்கத்திலும் பம்பர் & சறுக்கு தட்டு உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் இரு டெயில்லேம்பிற்கும் மத்தியில் லைட் பார் ஒன்று புதியதாக பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடிஃபை க்ரெட்டா காரின் உட்புறம் எக்கோ நப்பா ஜென்யூன் இத்தாலியன் லெதரினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆனது பியோனீர் யூனிட்டின் மூலமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்டாக் ஸ்பீக்கர் செட்அப், ஸேல்ஸஸ் ஆடியோ சிஸ்டத்தால் மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாடிஃபை பணிகளை ஏற்றுள்ள இந்த கார் க்ரெட்டாவின் டாப் வேரியண்ட்களுள் ஒன்றாக இருக்க வேண்டும்.