முதன்முறையாக இந்தியாவில் காட்சிதந்துள்ள புதிய ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்?

நான்காம் தலைமுறை ஹூண்டாய் டக்ஸன் கார் ஒன்று இந்தியாவில் சோதனை ஓட்டத்தின் போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

முதன்முறையாக இந்தியாவில் காட்சிதந்துள்ள புதிய ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்?

தென்கொரிய ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் டக்ஸன் எஸ்யூவி மாடல் அதன் மூன்றாம் தலைமுறை ஆகும். இந்த நிலையில் நான்காம் தலைமுறை டக்ஸனை விரைவில் இந்தியாவில் களமிறக்க ஹூண்டாய் தயாராகி வருவது இந்த சோதனை ஓட்டத்தின் மூலம் அறிய முடிகிறது.

முதன்முறையாக இந்தியாவில் காட்சிதந்துள்ள புதிய ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்?

Source: Instagram

இந்தியாவில் முதன்முறையாக சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள புதிய தலைமுறை ஹூண்டாய் டக்ஸனின் இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. நான்காம் தலைமுறை டக்ஸன் எஸ்யூவி மாடல் உலகளவில் கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

முதன்முறையாக இந்தியாவில் காட்சிதந்துள்ள புதிய ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்?

இந்த ஸ்பை படத்தில் சோதனை டக்ஸன் காரின் பெரும்பான்மையான பாகங்கள் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தோற்றம் மற்றும் மறைக்கப்பட்ட முன்பக்கத்தை வைத்து இது புதிய-தலைமுறை டக்ஸன் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. காரில் மிக முக்கியமான அப்டேட்கள் அனைத்தும் முன்பக்கத்தில் தான் வழங்கப்பட உள்ளன.

முதன்முறையாக இந்தியாவில் காட்சிதந்துள்ள புதிய ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்?

கடந்த ஆண்டில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்ட புதிய டக்ஸன் மாடலில் ஹெட்லைட்கள் அமைப்பானது மிகவும் நேர்த்தியாக க்ரில் பகுதியுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள இந்த அம்சம் நிச்சயம் இந்தியர்களையும் வெகுவாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்முறையாக இந்தியாவில் காட்சிதந்துள்ள புதிய ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்?

இதன்படி பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகளுடன் (டிஆர்எல்-கள்) எல்இடி ஹெட்லைட்கள் அமைப்பானது பிளவுப்பட்ட வடிவில் வழங்கப்பட்டுள்ளது. புதிய டக்ஸனின் க்ரில் அமைப்பு தான் விரைவில் உலகளவில் வெளியீடு செய்யப்பட உள்ள ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரிலும் வழங்கப்பட உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக இந்தியாவில் காட்சிதந்துள்ள புதிய ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்?

இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் புதிய தலைமுறை டக்ஸனின் உட்புறத்தில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட உள்ளன என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் உட்புறத்தில் டேஸ்போர்டில் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் இணைக்கக்கூடிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு ஒன்று, டிஜிட்டல் ஓட்டுனர் திரைக்கு ஒன்று என 10.25 இன்ச்சில் இரு திரைகள் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

முதன்முறையாக இந்தியாவில் காட்சிதந்துள்ள புதிய ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்?

இவற்றுடன் சன்ரூஃப், மடக்கும் வசதி கொண்ட இருக்கைகள் மற்றும் போஸ் சவுண்ட் சிஸ்டம் போன்றவையும் வழங்கப்படலாம். பயணிகளின் பாதுகாப்பிற்கு அதிக எண்ணிக்கையில் காற்றுப்பைகளை ஹூண்டாய் நிறுவனம் வழங்க முயற்சிக்கும். அத்துடன் ஒரே பாதையை வாகனம் கடைப்பிடிக்க உதவும் வசதி, கார் இயங்கும் பாதையை கண்காணிக்கும் உதவி மற்றும் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை காட்டும் மானிட்டர் போன்ற அதிநவீன ஓட்டுனர் உதவி வசதிகளையும் எதிர்பார்க்கிறோம்.

முதன்முறையாக இந்தியாவில் காட்சிதந்துள்ள புதிய ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்?

உட்புற கேபின் குறித்த விபரங்களை போல் இந்தியாவிற்கான புதிய தலைமுறை டக்ஸனில் எந்தெந்த என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன என்பதும் இப்போதைக்கு தெரியவில்லை. உலகளவில் ஹூண்டாயின் இந்த பிரீமியம் தரத்திலான எஸ்யூவி பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பெட்ரோல் என்ஜின் தேர்வுகளில் 2.5 லிட்டர் என்ஜின், 2 லிட்டர் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் என்பவை அடங்குகின்றன.

முதன்முறையாக இந்தியாவில் காட்சிதந்துள்ள புதிய ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்?

இதில் 2.5 லிட்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎஸ் ஆற்றலையும், 2 லி என்ஜின் 156 பிஎஸ் வரையிலான ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. 1.6 லி டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ர்ட் தொழிற்நுட்பமும் இணைக்கப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்து அதிகப்பட்சமாக 150 பிஎஸ் வரையிலும், சில வெளிநாட்டு சந்தைகளில் 180 பிஎஸ் தேர்விலும் வழங்கப்படுகின்றன.

முதன்முறையாக இந்தியாவில் காட்சிதந்துள்ள புதிய ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்?

டீசல் என்ஜின் தேர்வுகளாக 1.6 லிட்டர் டீசல் என்ஜின் (115 பிஎஸ்/ 136 பிஎஸ்) மற்றும் 2 லிட்டர் யூனிட் (186 பிஎஸ்) உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன. இவற்றுடன் ஹைப்ரீட் & ப்ளக்-இன் ஹைப்ரீட் தேர்விலும் 1.6 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் நான்காம் தலைமுறை டக்ஸன் மாடல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த பிரீமியம் தர எஸ்யூவி வாகனம் அனைத்து-சக்கர ட்ரைவ்ட்ரெயின் உடனும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

முதன்முறையாக இந்தியாவில் காட்சிதந்துள்ள புதிய ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்?

புதிய தலைமுறை ஹூண்டாய் டக்ஸன் இந்திய சந்தையில் அடுத்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம். டக்ஸனின் தற்போதைய இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.22.69 லட்சத்தில் இருந்து ரூ.27.47 லட்சம் வரையில் உள்ளன. நான்காம் தலைமுறை டக்ஸனின் விலைகள் இதனை காட்டிலும் சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.

Most Read Articles

English summary
Next Generation Hyundai Tucson SUV Spotted In India For The First Time; Launch Likely In 2022.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X