அசத்தும் டிசைன், ஆர்ப்பரிக்க வைக்கும் புதிய வசதிகள்... ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியீடு

புதுப்பொலிவுடன் அதிக வசதிகளுடன் கூடிய புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியீடு!

கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஆளுமையான தோற்றம், சிறப்பான எஞ்சின் தேர்வுகளுடன் இந்தியர்களை கவர்ந்தது. இந்த நிலையில், ஜீப் காம்பஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ல நிலையில், எம்ஜி ஹெக்டர், ஃபோக்ஸ்வேகன் டி ராக், ஸ்கோடா கரோக் உள்ளிட்ட எஸ்யூவிகளின் வருகை, ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியீடு!

இதையடுத்து, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் 2021 மாடலாக ஜீப் காம்பஸ் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் சீனாவில் நடந்த குவாங்ஸோ ஆட்டோ எக்ஸ்போவில் பொது பார்வைக்கு வந்த இந்த புதிய மாடல் இன்று இந்தியாவில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியீடு!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டிசைனில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதுப்பொலிவுடன் வந்துள்ள புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் முகப்பில் சிறிய மாற்றங்களுடன் கூடிய க்ரில் அமைப்பும், இரு புறங்களிலும் எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கூடிய எல்இடி ஹெட்லைட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியீடு!

முன்புற பம்பர் அமைப்பு மிகவும் முரட்டுத்தனமாக காட்சி தருகிறது. புதிய அலாய் வீல்கள், பின்புற டெயில் லைட் க்ளஸ்ட்டர்களும் இந்த காரின் வெளிப்புறத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன. அதேநேரத்தில், ஒட்டுமொத்த டிசைனில் பெரிய அளிவிலான மாற்றங்கள் செய்யப்படவில்லை.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியீடு!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உட்புறத்தில் புதிய டேஷ்போர்டு அமைப்பு இடம்பெற்றுள்ளது. டேஷ்போர்டு மிகவும் நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டு இருப்பதுடன், நடுவில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியீடு!

மேலும், ஜீப் நிறுவனத்தின் யு- கனெக்ட்-5 என்ற கனெக்டெட் கார் தொழில்நுட்ப இணைப்பு வசதியும் உள்ளது. இதன்மூலமாக, உரிமையாளர் மொபைல்போன் மூலமாக சில முக்கியத் தகவல்களை பெறுவதற்கும், சில வசதிகளை ரிமோட் முறையில் கட்டுப்படுத்த முடியும். ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். அமேஸான் அலெக்ஸா வாய்ஸ் கன்ட்ரோல் தொழில்நுட்பத்தையும் பெற்றிருக்கிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புதிய ஸ்டீயரிங் வீல் ஆகியவையும் முக்கிய மாற்றங்களாக இடம்பெற்றுள்ளன.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியீடு!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் வயர்லெஸ் மொபைல்போன் சார்ஜர், வென்டிலேட்டர் வசதியுடன் முன் இருக்கைகள், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதிகளும் உள்ளன.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியீடு!

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஆகிய முக்கிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியீடு!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்க வைக்கப்பட உள்ளன. இதில், 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 163 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியீடு!

இதன் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும். டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் இசட்எஃப் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியீடு!

அடுத்த சில வாரங்களில் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்படும். அடுத்த மாத துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep has unveiled new Compass facelift model in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X