Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 9 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- News
ஒட்டுமொத்த நாடும் தேடும் 'அந்த' ஒற்றை நபர்... பிரிட்டனில் பரபரப்பு... காரணம் இதுதான்
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜீப் வ்ராங்க்லரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! செம்ம காஸ்ட்லீ, விலை ரூ.50 லட்சத்திற்கும் அதிகம்
வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள ஜீப் வ்ராங்க்லர் இந்தியாவில் வருகிற மார்ச் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்ப்போம்.

வ்ராங்க்லர் வாகனங்களை இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யவுள்ளதாக ஜீப் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டில் அறிவித்திருந்தது. அதன்படி அடுத்த் மார்ச் மாதத்தில் வ்ராங்க்லரை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஜீப் நிறுவனம் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது.

முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலைக்கு மாற்றாக பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு நம் நாட்டில் வைத்து முழு வாகனமாக உருவாக்கப்படவுள்ள வ்ராங்க்லரின் தயாரிப்பிற்கு இந்தியாவில் 180 கோடியை ஜீப் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

இந்த அசெம்பிள் பணிகளுக்கு புனேக்கு அருகே உள்ள ரஞ்சகான் தொழிற்சாலையை பயன்படுத்த ஜீப் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து 2020 வ்ராங்க்லர் ரூ.63.94 லட்சம் என்ற விலையில் கடந்த ஆண்டு இந்தியவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டதால் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அடுத்த மாதத்தில் இருந்து இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படவுள்ளதால் இந்த எஸ்யூவி வாகனத்தின் இந்த விலை சற்று குறைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

புதிய ஜீப் வ்ராங்க்லர் நாவிகேஷன், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியை கொண்ட 8.4 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை மத்தியில் கொண்ட அப்டேட்டான டேஸ்போர்ட் உடன் புதுப்பிக்கப்பட்ட கேபினை பெற்றுள்ளது.

இவற்றுடன் பாசிவ் சாவியில்லா நுழைவு, புஷ்-பொத்தான் ஸ்டார்ட் போன்ற வசதிகளையும் இந்த எஸ்யூவி வாகனத்தில் எதிர்பார்க்கலாம். இதன் உட்புற கேபின் 5 இருக்கைகளுடன் பளிச்சிடும் நிறத்தில் ப்ரீமியம் தரத்திலான லெதர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2020 ஜீப் வ்ராங்கரில் 2.0 லிட்டர் அதிக பவர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 268 பிஎஸ் மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

இந்த ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு டிஃப்ரென்ஷியல் லாக்குகள் உடன் வழங்கப்படுகிறது. இதனை மைய கன்சோலில் வழங்கப்படும் ஸ்விட்ச்கள் மூலம் ஆக்டிவேட் செய்ய முடியும். இதன் மூலமாக 4-சக்கர-ட்ரைவ் ஆட்டோமேட்டிக் மோட் உடன் ஹை மற்றும் லோ மோட்களையும் பெறலாம்.