முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த கியாவின் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

புதிய கியா எம்பிவி கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த கியாவின் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

இந்திய சந்தைக்காக எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களின் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளதாக கியா நிறுவனம் கடந்த ஆண்டில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது புதிய கியா எம்பிவி கார் ஒன்று இந்தியாவில் சாலை சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த கியாவின் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

இதற்கு முன்னர் இப்படிப்பட்ட கியா கார் நம் நாட்டில் சாலையில் காட்சிதந்தது இல்லை. தென்கொரியாவில் தான் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டிருந்தது. ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் கார் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த கியாவின் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

தற்சமயம் விற்பனையில் இருக்கும் செல்டோஸ், கார்னிவல் எம்பிவி மற்றும் சொனெட் கார்களுக்கு அடுத்து கியா பிராண்டில் விற்பனை செய்யப்பட உள்ள நான்காவது காராக இது இருக்கலாம். தற்போதைக்கு கேஒய் என்ற குறியீட்டு பெயரால் குறிப்பிடப்பட்டு வரும் இந்த எம்பிவி கார் செல்டோஸின் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த கியாவின் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

கிட்டத்தட்ட 4.5 மீட்டர் நீளத்தில் உள்ள இந்த கியா எம்பிவி கார் இந்த நீளத்தை வைத்து பார்க்கும்போது மாருதி சுஸுகி எர்டிகா, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ கார்களுக்கு நேரடி போட்டியாக விளங்கும்.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த கியாவின் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

தற்போது கிடைத்துள்ள படங்கள் இந்த காரில் மூன்று இருக்கை வரிசை வழங்கப்பட்டுள்ளதை காட்டுகின்றன. இதனால் 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் இந்த எம்பிவி கார் விற்பனை செய்யப்படும். இந்த காரின் வெளிப்புற தோற்றத்தை பற்றி ஆராய்வது தற்போதைக்கு சரியானதாக இருக்காது.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த கியாவின் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

ஏனென்றால் இதன் வெளிப்புற தோற்றத்தில் கியா இன்னமும் வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டு வரலாம். எப்படியிருந்தாலும், எல்இடி ஹெட்லைட்கள் & டெயில்லைட்கள் உடன் காரை சுற்றிலும் க்ரோம் பாகங்களை எதிர்பார்க்கலாம்.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த கியாவின் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

என்ஜின் அமைப்பை பொறுத்தவரையில், செல்டோஸில் வழங்கப்படும் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளில் இந்த எம்பிவி கார் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம். அதேநேரம் ஆற்றல்மிக்க 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வும் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த கியாவின் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளை கியா வழங்கும். உட்புற வசதிகளை பொறுத்தவரையில் இந்த புதிய எம்பிவி கார் பெரும்பான்மையாக செல்டோஸை தான் ஒத்திருக்கும். கியா இந்த எம்பிவி காரை ஒவ்வொரு வருடத்திலும் 50,000 யூனிட்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த கியாவின் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

இந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் உலகளாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற கியாவின் இந்த எம்பிவி கார் இந்தியாவில் அடுத்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம். இதன் விலை நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி ரூ.10- 15 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #கியா #kia
English summary
New KIA MPV Spied In India For 1st Time, Launch In Jan 2022.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X