எக்ஸ்யூவி700 உடன் விற்பனைக்கு வரும் மஹிந்திரா பொலிரோ நியோ!! செப்டம்பரில் அறிமுகம்?

பொலிரோ நியோ என்கிற பெயரில் கொண்டுவரப்படவுள்ள மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் கார் வருகிற 2021 செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரஙகளை இந்த செய்தியில் பார்ப்போம்.

எக்ஸ்யூவி700 உடன் விற்பனைக்கு வரும் மஹிந்திரா பொலிரோ நியோ!! செப்டம்பரில் அறிமுகம்?

விற்பனையில் பெரிய அளவில் ஜொலிக்காவிடினும் டியூவி300 சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை சந்தையில் விற்பனைக்கு கொண்டுவர மஹிந்திரா நிறுவனம் கடந்த பல மாதங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

எக்ஸ்யூவி700 உடன் விற்பனைக்கு வரும் மஹிந்திரா பொலிரோ நியோ!! செப்டம்பரில் அறிமுகம்?

பொலிரோ நியோ என்கிற பெயரில் கொண்டுவரப்படும் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனைகளில் உட்படுத்தப்பட்டதை பல முறை பார்த்துள்ளோம். இந்த நிலையில் தான் தற்போது டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகம் எக்ஸ்யூவி700 உடன் செப்டம்பரில் இருக்கும் என செய்திகள் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளிவந்துள்ளன.

எக்ஸ்யூவி700 உடன் விற்பனைக்கு வரும் மஹிந்திரா பொலிரோ நியோ!! செப்டம்பரில் அறிமுகம்?

கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு முன்னர் டியூவி300 ஃபேஸ்லிஃப்ட்டின் டிவிசி வீடியோவிற்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டது உங்களில் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். இவ்வாறான நேரங்களில் சில ஸ்பை வீடியோக்களும் படங்களும் நமக்கு கிடைத்துள்ளன.

எக்ஸ்யூவி700 உடன் விற்பனைக்கு வரும் மஹிந்திரா பொலிரோ நியோ!! செப்டம்பரில் அறிமுகம்?

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக இந்த மஹிந்திரா மாடல் ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல்களுடன் பெரிய ஹெட்லேம்ப் & கூடுதல் ப்ரீமியம் தோற்றத்திலான பம்பரை ஏற்றுள்ளது. இதன் காரணமாக வாகனத்தின் முன்பகுதி மேம்பட்டதாக மாறியுள்ளது.

எக்ஸ்யூவி700 உடன் விற்பனைக்கு வரும் மஹிந்திரா பொலிரோ நியோ!! செப்டம்பரில் அறிமுகம்?

முன் பொனெட்டின் உயரத்தில் மாற்றமில்லை. தற்போதைய பாதசாரிகள் சோதனைகளை நிவர்த்தி செய்வதற்காக பொனெட்டின் உயரத்தில் மஹிந்திரா கை வைத்திருக்காது. அதேபோல் வாகனத்தின் பின் பகுதியிலும் பெரிய அளவில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

எக்ஸ்யூவி700 உடன் விற்பனைக்கு வரும் மஹிந்திரா பொலிரோ நியோ!! செப்டம்பரில் அறிமுகம்?

டெயில்லேம்ப்கள், பம்பர் & பின்கதவில் கூடுதல் சக்கர கவர் உள்ளிட்டவற்றின் வடிவங்களில் சிறிய மாற்றங்கள் கொண்டுவரப்படலாம். ஆனால் அதற்கும் வாய்ப்புகள் குறைவே. டியூவி300 ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புற கேபினை காட்டும் ஸ்பை படங்கள் இதுவரையில் நமக்கு கிடைக்க பெறவில்லை.

எக்ஸ்யூவி700 உடன் விற்பனைக்கு வரும் மஹிந்திரா பொலிரோ நியோ!! செப்டம்பரில் அறிமுகம்?

வெளிப்புற தோற்றத்திற்கு ஏற்ப பொலிரோ நியோவின் உட்புற கேபினின் தோற்றமும் சில புதிய வசதிகளுடன் மெருக்கேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமக்கு தெரிந்தவரையில், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உடன் இணைக்கக்கூடிய மேம்படுத்தப்பட்ட தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.

எக்ஸ்யூவி700 உடன் விற்பனைக்கு வரும் மஹிந்திரா பொலிரோ நியோ!! செப்டம்பரில் அறிமுகம்?

அதேபோல் தானியங்கி ஏசி, க்ரூஸ் கண்ட்ரோலையும் எதிர்பார்க்கலாம். அதேநேரம் தற்போதைய டியூவி300-இல் பயணிகளின் பாதுகாப்பிற்கு வழங்கப்படும் இரட்டை காற்றுப்பைகள், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், இபிடியுடன் ஏபிஎஸ் மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கை உள்ளிட்டவையும் தொடரப்படும்.

எக்ஸ்யூவி700 உடன் விற்பனைக்கு வரும் மஹிந்திரா பொலிரோ நியோ!! செப்டம்பரில் அறிமுகம்?

பொலிரோ நியோவில் பிஎஸ்6-க்கு இணக்கமான, வழக்கமான 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பெட்ரோல் என்ஜின் தேர்வு வழங்கப்பட வாய்ப்பில்லை. பொலிரோ நியோவின் எக்ஸ்ஷோரூம் விலைகளை ரூ.8.5 லட்சத்தில் இருந்து ரூ.11 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
New Mahindra Bolero Neo SUV will be launch in 2021 september.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X