Just In
- 2 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 3 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 4 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 4 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
'கவலைப்படதீங்க.. கொரோனாவை கட்டுப்படுத்த எல்லா உதவிகளையும் நாங்க செய்கிறோம்'..சீனா அசத்தல் அறிவிப்பு
- Sports
அப்படியே நான் ஷாக்காயிட்டேன்... சாரி கேட்ட விராட் கோலி... என்ன இப்படி பண்ணிட்டாரு கிங் கோலி?
- Finance
ஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகள்.. ஜூலையில் அறிமுகம்..!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இவ்வளவு பெரியதாகவா!! புதிய ஸ்பை படங்களில் காட்சித்தந்த 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!
புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் புதிய ஸ்பை படங்கள் மீண்டும் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

முந்தைய மஹிந்திரா தயாரிப்புகளை போன்று இந்த நிறுவனத்தில் இருந்து விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தலைமுறை ஸ்கார்பியோவும் கடந்த பல மாதங்களாக தீவிரமாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது.

அப்போது ஒவ்வொரு முறையும் வெளியாகும் ஸ்பை படங்கள் காரை பற்றி எதாவது ஒரு விபரத்தை நமக்கு வழங்கி வந்துள்ளன. அவற்றின் மூலமாக 2021 ஸ்கார்பியோ எவ்வாறு இருக்கும் என்பது குறித்த ஒரு ஐடியா நமக்கு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ரஷ்லேன் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை படங்களின் மூலம் புதிய ஸ்கார்பியோவை பற்றிய கூடுதல் விபரங்கள் எதுவும் அறிய முடியவில்லை என்றாலும் ஏற்கனவே தெரியவந்த விஷயங்களை அமோதிப்பதுபோல் இந்த படங்கள் உள்ளன.

ஏனெனில் வழக்கம்போல் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையிலேயே 2021 ஸ்கார்பியோ இந்த சோதனை ஓட்டத்திலும் உட்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நேர்த்தியான லைன்கள் மற்றும் தட்டையான மேற்பரப்புடன் எளிதில் அடையாளம் காணக்கூடிய விதத்தில் புதிய ஸ்கார்பியோவை மஹிந்திரா வடிவமைப்பாளர்கள் வடிவமைத்திருப்பார்கள் என்பது மட்டும் உறுதி.

இந்த எஸ்யூவி காரின் முன்பக்கத்தை 7-ஸ்லாட் க்ரில், ஸ்போர்டியான எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் துணை காற்று ஏற்பான்களை இருபுறங்களிலும் கொண்ட புதிய பம்பருடன் எதிர்பார்க்கலாம். அதேபோல் பின்பக்கத்தில் வழக்கமான செகுத்து வடிவிலான டெயில்லைட்கள் மற்றும் பொருட்களை வைக்கும் இடத்திற்கான நிமிர்ந்த கதவு உள்ளிட்டவை நிச்சயம் வழங்கப்படும்.

உட்புறத்தில் புதிய மைய கன்சோல், இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், ஏசி துளைகள் மற்றும் ஸ்டேரிங் சக்கரத்துடன் டேஸ்போர்டு மொத்தமாகவே புத்துணர்ச்சியான தோற்றத்தில் வழங்கப்படவுள்ளது. இவற்றுடன் இணைப்பு தொழிற்நுட்பங்களை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இந்த 2021 காரில் பொருத்தப்படவுள்ளது ஏற்கனவே தெரிந்தது தான்.

அதேபோல் முந்தைய ஸ்பை படங்கள் என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் பொத்தான் காரில் வழங்கப்பட்டிருப்பதையும் வெளிக்காட்டி இருந்தன. புதிய லேடார் ஃப்ரேம் சேசிஸில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் புதிய ஸ்கார்பியோவை அதன் முந்தைய தலைமுறையை காட்டிலும் பாதுகாப்பு செயல்திறனில் உயர்ந்ததாக எதிர்பார்க்கலாம்.

மஹிந்திராவில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தார் உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் 5-ற்கு 4 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. இதனால் 2021 ஸ்கார்பியோவையும் அதற்கு இணையான பாதுகாப்பு தரத்தில் தான் விற்பனைக்கு கொண்டுவர மஹிந்திரா முயற்சிக்கும்.

அதேபோல் புதிய தலைமுறை தாரின் 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜினை புதிய ஸ்கார்பியோ பெற்றுவரவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதேநேரம் வழக்கமான 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தேர்வையும் எதிர்பார்க்கலாம். இருப்பினும் இந்த என்ஜின்கள் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளில் மாற்றம் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது.