Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ கார் மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா நிறுவனம் இந்த 2021ஆம் ஆண்டிற்குள்ளாக புதிய தலைமுறை ஸ்கார்பியோவை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது இந்த எஸ்யூவி கார் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனை ஓட்டம் காரின் செயல்திறனை சோதிக்கும் வகையில் உயரத்தில் சாலைகளை கொண்ட இமாலய மலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் புதிய ஸ்கார்பியோவில் நிச்சயம் புதிய என்ஜின் தேர்வுகளை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

ஜிக்வீல்ஸ் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் சோதனை ஸ்கார்பியோ மாதிரி கார் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காரில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை நம்மால் பார்க்க முடிகிறது.

முக்கியமாக காரின் பரிமாண அளவுகள் அனைத்தும் அதிகரிக்கப்பட்டிருப்பதை இங்கு கூற வேண்டும். இதன் காரணமாக உட்புறத்தில் நன்கு விசாலமாக பெரிய அளவில் காலியிடத்தை எதிர்பார்க்கலாம்.

நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களில் சோதனை ஸ்கார்பியோ முன்பக்கத்தில் அகலமான க்ரில், ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல்களுடன் ரீஸ்டைலில் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் மறுவேலை செய்யப்பட்ட பம்பர்களை கொண்டுள்ளது.

இவற்றுடன் அப்டேட் செய்யப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள், புதிய அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றையும் புதிய ஸ்கார்பியோ பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிபுறத்தை காட்டிலும் உட்புறத்தில்தான் மிக முக்கியமான அப்கிரேட்களை ஸ்கார்பியோவிற்கு மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது.

இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் பிராண்டின் இணைப்பு தொழிற்நுட்பத்தை ஏற்கக்கூடிய பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை அடங்கலாம். அதுமட்டுமில்லாமல் தற்போதைய ஸ்பை படங்கள் 2021 ஸ்கார்பியோ பனோராமிக் சன்ரூஃபையும் பெற்று வரவுள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

இருப்பினும் இவை அனைத்தை விடவும் புதிய தலைமுறை ஸ்கார்பியோவிற்கு அதன் மூன்றாவது இருக்கை வரிசைதான் அடையாளமாக விளங்கவுள்ளது. இதைதான் வாடிக்கையாளர்களை கவரும் அம்சமாகவும் மஹிந்திரா நிறுவனம் பயன்படுத்தவுள்ளது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. அதாவது 2020 மஹிந்திரா தாரில் வழங்கப்பட்டுள்ள 2.2 லிட்டர் ‘எம்ஹாவ்க்' டீசல் என்ஜின் 2021 ஸ்கார்பியோவிற்கும் தொடரப்படலாம்.

அதேபோல் புதிய தலைமுறை தார் ஏற்றுள்ள 2.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் என்ஜின் தேர்வும் மஹிந்திராவின் இந்த புதிய அறிமுகத்திற்கு வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின்களுடன் ஸ்டாண்டர்டாக மேனுவல் கியர்பாக்ஸும், கூடுதல் தேர்வாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் கொடுக்கப்படலாம்.

மஹிந்திரா சமீபத்தில் ‘ஸ்கார்பியோ என்' மற்றும் ஸ்டிங் என்ற இரு பெயர்களை பதிவு செய்து கொண்டுள்ளது. இவை இரண்டும் புதிய தலைமுறை ஸ்கார்பியோவிற்கு பயன்படுத்தப்படும் என தகவல்கள் கூறினாலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இதுவரை வெளிவரவில்லை.