மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மீண்டும் எப்போது அறிமுகம்? - புதிய தகவல் வெளியானது!

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எஸ்யூவி மாடல்களில் பல்வேறு மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, விரைவில் விற்பனையில் இருந்து விலக்கப்படும் எக்ஸ்யூவி500 எஸ்யூவியை மீண்டும் வேறு ரக மாடலாக நிலைநிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மீண்டும் வருவது உறுதி... ஆனால், பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி500 எஸ்யூவி வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்த மாடல். ஆளுமையான டிசைனுடன் சரியான விலையில் கிடைத்து வருவதால் ஒரு தசாப்தமாக எஸ்யூவி பிரியர்களின் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மீண்டும் வருவது உறுதி... ஆனால், பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

இந்த நிலையில், தற்போது எஸ்யூவி மார்க்கெட்டில் கடும் சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு மாற்றாக அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் எக்ஸ்யூவி700 என்ற மாடலை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மீண்டும் வருவது உறுதி... ஆனால், பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

புதிய எக்ஸ்யூவி700 எஸ்யூவி விற்பனைக்கு வந்த உடன், எக்ஸ்யூவி500 விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளதாகவும் மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மீண்டும் வருவது உறுதி... ஆனால், பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வரும் 2024ம் ஆண்டு மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது. அதேநேரத்தில், எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலானது சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் கட்டமைப்புக் கொள்கையை பயன்படுத்தி உருவாக்கப்பட உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மீண்டும் வருவது உறுதி... ஆனால், பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

ஏற்கனவே சாங்யாங் டிவோலி அடிப்படையில்தான் எக்ஸ்யூவி300 எஸ்யூவி உருவாக்கப்பட்டது. அதே கட்டமைப்புக் கொள்கையில்தான் இந்த புதிய எக்ஸ்யூவி500 எஸ்யூவியும் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மீண்டும் வருவது உறுதி... ஆனால், பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

புதிய எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது S301 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த புதிய மாடலானது 4.2 மீட்டர் முதல் 4.3 மீட்டர் இடையிலான நீளம் கொண்டதாக இருக்கும். அதாவது, தற்போது விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி500 எஸ்யூவியைவிட 300 மிமீ நீளம் குறைவானதாக இருக்கும் என்று தெரிகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மீண்டும் வருவது உறுதி... ஆனால், பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

இந்த புதிய மாடலானது ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் ஆகிய மாடல்களுக்கு மிக நேரடி போட்டியாக இருக்கும். இதன்மூலமாக, எக்ஸ்யூவி300 மற்றும் எக்ஸ்யூவி700 ஆகிய மாடல்களுக்கு இடையிலான இடைவெளியை தவிர்க்க வாய்ப்பு கிடைக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மீண்டும் வருவது உறுதி... ஆனால், பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 160 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
According to the report from Autocar India, the XUV500 will be back in the year 2024. Mahindra will re-launch the XUV500 with an all-new platform. The new XUV500 will be using a heavily modified Ssangyong Tivoli (XUV300) platform.
Story first published: Wednesday, May 12, 2021, 10:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X