காத்திருந்தது போதும் விரைவில் விற்பனைக்கு வருகிறது 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்!! டீசர் வீடியோ வெளியீடு

விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 2021 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

காத்திருந்தது போதும் விரைவில் விற்பனைக்கு வருகிறது 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்!! டீசர் வீடியோ வெளியீடு

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் காராக விளங்கும் ஸ்விஃப்ட் முக்கியமான ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை விரைவில் ஏற்கவுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் உல்களவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் தற்சமயம் சுஸுகியின் தாயகமான ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனையில் உள்ளது.

அவற்றை தொடர்ந்து இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய ஷோரூம்களுக்கு இன்னும் சில நாட்களில் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது புதிய டீசர் வீடியோவினை வெளியிட்டுள்ளது.

காத்திருந்தது போதும் விரைவில் விற்பனைக்கு வருகிறது 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்!! டீசர் வீடியோ வெளியீடு

இந்த வீடியோவில், புதிய ஸ்விஃப்ட் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதை தெரியப்படுத்தும் விதத்தில், 2021 ஸ்விஃப்ட் உங்களது வழியில் வருகிறது என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தோற்றத்தை பொறுத்தவரையில், முன்பக்கத்தில் இந்த ஹேட்ச்பேக் கார் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக சிறிது மறுவடிவமைக்கப்பட்ட ஹெட்லேம்ப்களை பெற்றுள்ளது.

காத்திருந்தது போதும் விரைவில் விற்பனைக்கு வருகிறது 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்!! டீசர் வீடியோ வெளியீடு

இதனுடன் மையத்தில் க்ரோம் ஸ்லாட்டை கொண்ட புதிய மெஷ் க்ரில், சற்று மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் பம்பர் உடன் ஃபாக் விளக்குகளை ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் கொண்டுள்ளது. பக்கவாட்டில் அலாய் சக்கரங்கள் வழக்கமான டிசைனில் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காத்திருந்தது போதும் விரைவில் விற்பனைக்கு வருகிறது 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்!! டீசர் வீடியோ வெளியீடு

ஆனால் சர்வதேச மாடல் வித்தியாசமான டிசைனில் அலாய் சக்கரங்களை பெற்றுவந்துள்ளது. ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் டாப் ட்ரிம் வழக்கம்போல் கருப்பு நிற மேற்கூரை உடன் இரு நிறங்களில் வழங்கப்படலாம். மற்றப்படி கேபினின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது.

காத்திருந்தது போதும் விரைவில் விற்பனைக்கு வருகிறது 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்!! டீசர் வீடியோ வெளியீடு

இந்த வகையில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதி கொண்ட வழக்கமான 7.0 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அப்படியே ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்டிலும் தொடரப்படும். ஆனால் கருப்பு நிற கேபினில் சில்வர் நிற உள்ளீடுகளை எதிர்பார்க்கலாம்.

காத்திருந்தது போதும் விரைவில் விற்பனைக்கு வருகிறது 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்!! டீசர் வீடியோ வெளியீடு

புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரில் கூடுதல் ஆற்றல்மிக்க 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் ட்யுல்-ஜெட் பெட்ரோல் என்ஜினை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெட்ரொல் என்ஜின் 82 பிஎச்பி-ஐ காட்டிலும் சற்று கூடுதல் ஆற்றல் உடன் 89 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக வழங்கப்படவுள்ளது.

காத்திருந்தது போதும் விரைவில் விற்பனைக்கு வருகிறது 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்!! டீசர் வீடியோ வெளியீடு

எரிபொருள் திறனை மேம்படுத்தும் வகையில் ஐடியல் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழிற்நுட்பத்துடன் மாருதி பலேனோ மற்றும் டிசைர் ஃபேஸ்லிஃப்ட் கார்களில் வழங்கப்படும் இந்த ட்யுல்-ஜெட் என்ஜின் உடன் புதிய 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் செட்அப் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர் தேர்வும் புதிய ஸ்விஃப்ட்டில் வழங்கப்படலாம்.

Most Read Articles

English summary
2021 Maruti Suzuki Swift Facelift Official Teaser Out, Launch Soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X