உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

2022 மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் செடான் கார் உலகளவில் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் மேடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய தலைமுறை அப்கிரேடாக இந்த மெர்சிடிஸ் செடான் காரில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

தற்போது உலகளவில் வெளியிடப்பட்டிருப்பது ஆறாம் தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் காராகும். செடான் மற்றும் எஸ்டேட் வடிவங்களில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த 2022 மாடல் தான் எரிப்பு என்ஜினில் இருந்து மின்மயமாக்கப்பட்ட என்ஜினை தனது அனைத்து வேரியண்ட்களிலும் பெறும் இந்த ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் காராகும்.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

அதேநேரம் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களுக்கு போட்டியாக கொண்டுவரப்பட்டுள்ள 2022 சி-கிளாஸில் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸின் தொழிற்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஏனெனில் பொதுவாகவே சி-கிளாஸ், எஸ்-கிளாஸின் பேபி வெர்சன் என பார்க்கப்படுகிறது.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

வெளிப்புறம்

புதிய சி-கிளாஸில் மிக முக்கிய மாற்றங்கள் அனைத்தும் காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கங்களில் தான் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக விளக்குகள் பொருத்தப்படும் குழிகளின் வடிவங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. எஸ்டேட் வெர்சனில் அத்தகைய தோற்றத்திற்காக காரின் பின்பக்கத்தில் மேற்கூரை சரிவு பகுதியில் தீவிரமான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

காரின் ஷோல்டர் லைன் கூடுதல் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டதாக மெர்சிடிஸ் நிறுவனம் டிஜிட்டல் உலக ப்ரீமியர் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளது. சி-கிளாஸ் செடான் & வேகன் என்ற இரு மாடல்களிலும் வீல்பேஸ் அளவு 25மிமீ அதிகரிக்கப்பட்டு 2,865மிமீ ஆக கொண்டுவரப்பட்டுள்ளது.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

அதேபோல் கூடுதல் பயணிகள் ஏற்றி கொள்ளும் வகையில் கார்களின் நீளமும் 65மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்டேட் வெர்சனில் இந்த நீள அதிகரிப்பு காரணமாக பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி 30 லிட்டர்களாக கொண்டுவரப்பட்டுள்ளது.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

உட்புற வசதிகள்

மெர்சிடிஸின் இரண்டாம் தலைமுறை எம்பக்ஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றுவந்துள்ள புதிய தலைமுறை சி-கிளாஸில் ஏற்கனவே கூறியதுபோல் எஸ்-கிளாஸின், எளிமையாக பயன்படுத்தக்கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் திரை, முன் இருக்கைகளுக்கு சரியாக நடுவில் டேப்லெட் வடிவிலான மைய தொடுத்திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

சி-கிளாஸில் எம்பக்ஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் 10.25 இன்ச்சிலும், 11.9 இன்ச் திரை கூடுதல் தேர்வாகவே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எஸ்-கிளாஸில் 11.9 இன்ச்சில் இந்த தொடுத்திரை நிலையாக வழங்கப்படுகிறது. ஈஸியாக உபயோகப்படுத்த இந்த திரை சிறுது ஓட்டுனர் பக்கம் சாய்க்கப்பட்டுள்ளது.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

இவற்றுடன் டேஸ்போர்டில் உள்ள எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை வாடிக்கையாளர்கள் 10.25 இன்ச் மற்றும் 12.3 இன்ச்சில் பெறும் வகையில் வழங்கப்படவுள்ளது. அதுமட்டுமில்லாமல் நாவிகேஷன், உதவி அல்லது சேவை செயல்பாட்டு மோட்களின் தேர்வுகளும் இந்த 2022 மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

கூடுதல் தேர்வாக கேபினை சுற்றிலும் வழங்கப்படவுள்ள விளக்குகள் அமைப்பை ஒளியியல் ஃபைபர் தொழிற்நுட்பத்துடன் பெறலாம். கேபினில் பெரும்பான்மையான இன்ஃபோடெயின்மெண்ட் செயல்பாடுகளை தொடுதல் மூலமாக செயல்படுத்தலாம்.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

என்ஜின் அமைப்பு

புதிய சி-கிளாஸ் பிரத்யேகமான, மின்மயமாக்கப்பட்ட 4-சிலிண்டர் என்ஜின் தேர்வுகளுடன் விற்பனையை துவங்கவுள்ளது. இந்த என்ஜின்களில் வழக்கமான டபிள்யூ206 டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்கள் அடங்கினாலும், அவை தற்போது 48 வோல்ட் பெல்ட் மூலமாக ஒற்றிணைக்கப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர் உடன் இணைக்கப்பட்டுள்ளன.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

இந்த இணைப்பினால் கூடுதலாக 20 பிஎச்பி வரையில் ஆற்றலை பெறலாம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் என்ஜின்களின் வரிசை 1.5 லிட்டர் சி180 என்ஜின் உடன் துவங்குகிறது. அதிகப்பட்சமாக 170 எச்பி மற்றும் 263 டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் உதவியுடன் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 8.6 வினாடிகளிலும், அதிகப்பட்சமாக மணிக்கு 232கிமீ வேகத்திலும் இயங்க முடியும்.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

அடுத்த 1.5 லிட்டர் சி200 என்ஜின் அதிகப்பட்சமாக 204 எச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முந்தைய பெட்ரோல் என்ஜினை காட்டிலும் 100kmph வேகத்தை 1.2 வினாடிகள் முன்னதாகவும், அதிகப்பட்சமாக 153kmph வேகத்திலும் இயங்க முடியும்.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

கடைசி பெட்ரோல் என்ஜினான 2.0 லிட்டர் சி300, அதிகப்பட்சமாக 259 எச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 100kmph வேகத்தை வெறும் 6 வினாடிகளில் எட்ட உதவும்.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

இந்த பெட்ரோல் என்ஜின்களுடன் மூன்று டீசல் என்ஜின் தேர்வுகளிலும் புதிய தலைமுறை சி-கிளாஸ் விற்பனை செய்யப்படவுள்ளது. அதாவது மெர்சிடிஸின் ஒரே 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தான் சி200டி (163 எச்பி), சி220டி (200 எச்பி) மற்றும் சி300 (265 எச்பி) என்ற மூன்று விதமான வடிவங்களில் வழங்கப்படவுள்ளது.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

ஆனால் இந்த டீசல் என்ஜின் 42சிசி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் மற்ற அனைத்து என்ஜின்களை காட்டிலும் (பெட்ரோல் என்ஜின்கள் உள்பட) சி300டி என்ஜினில் மிக விரைவாக 100kmph வேகத்தை வெறும் 5.7 வினாடிகளில் எட்டிவிடலாம்.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

சி200, சி300 மற்றும் சி220டி என்ஜின்கள் மெர்சிடிஸின் 4மேட்டிக் 4-சக்கர ட்ரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும். ஆற்றல் பரிமாற்றத்தில் உராய்வை குறைப்பதினால் தேவையான அளவிற்கு என்ஜின் ஆற்றலை காருக்கு வழங்கும் இந்த ட்ரைவ் சிஸ்டம் காரின் மேம்படுத்தப்பட்ட டைனாமிக்ஸ், எடை குறைப்பினால் கூடுதல் டார்க் திறனை முன் சக்கரங்களுக்கு வழங்கும்.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

இலகுவான, கூடுதல் செயல்திறன்மிக்க 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் புதிய சி-கிளாஸின் அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேரியண்ட்களுடன் ப்ளக்-இன் ஹைப்ரீட் சி300இ வேரியண்ட்டையும் புதிய சி-கிளாஸ் எதிர்காலத்தில் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

மெக்கானிக்கல் பாகங்கள்

காற்று சஸ்பென்ஷன் 2022 சி-கிளாஸின் அனைத்து மாடல்களுக்கும் நிலையாக வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் மற்றும் தொடர்ச்சியாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டேம்பிங் தேர்வும் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் வழங்கவுள்ளது.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

அதேநேரம் மெர்சிடிஸின் லக்சரி காரான எஸ்-கிளாஸின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மேம்படுத்தப்பட்ட சுறுசுறுப்பு மற்றும் திருப்பங்களின்போது அதிக இடத்தை பயன்படுத்துவதை குறைக்கும் பின்பக்க-அச்சு ஸ்டேரிங் தேர்வையும் புதிய சி-கிளாஸ் ஏற்றுள்ளது.

உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன?

இந்திய வருகை

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் புதிய சி-கிளாஸின் இந்திய வருகை குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் இந்த புதிய பென்ஸ் செடான் கார் வரும் ஆண்டுகளில் நம் நாட்டு சந்தைக்கும் வருகை தர வாய்ப்புள்ளது. இதற்கு விற்பனையில் போட்டி அளிக்கும் வகையில் நம் நாட்டில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், ஆடி ஏ4 மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ கார்கள் தற்சமயம் விற்பனையில் உள்ளன.

Most Read Articles

English summary
New Mercedes C-Class revealed. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X