விலை குறைவான Astor காரில் கூட செல்போன் இணைப்பு வசதி!! வாடிக்கையாளர்களை கவர கொண்டுவரும் MG

எம்ஜி மோட்டாரின் புதிய எஸ்யூவி மாடலான ஆஸ்டரில் வழங்கப்பட உள்ள ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்த நமக்கு கிடைக்க பெற்றுள்ள எம்ஜி மோட்டாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

விலை குறைவான ஆஸ்டர் காரில் கூட செல்போன் இணைப்பு வசதி!! வாடிக்கையாளர்களை கவர கொண்டுவரும் எம்ஜி

எம்ஜி மோட்டார் நிறுவனம் விரைவில் அதன் புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி காராக ஆஸ்டர் என்கிற மாடலை அறிமுகப்படுத்தவுள்ளதை இந்த அறிக்கையில் ஆரம்பத்திலேயே மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆதலால் எம்ஜி ஆஸ்டரின் அறிமுகத்திற்கு காத்திருப்பதில் ஒரு அர்த்தம் உள்ளது.

விலை குறைவான ஆஸ்டர் காரில் கூட செல்போன் இணைப்பு வசதி!! வாடிக்கையாளர்களை கவர கொண்டுவரும் எம்ஜி

இதன் பின்பு இந்த ஊடக அறிக்கையில், இந்த எஸ்யூவி கார் அதன் வேரியண்ட்கள் அனைத்திலும் நிலையான வசதியாக ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியினை பெற்றுவரவுள்ளதை குறிப்பிட்டுள்ளனர். அதாவது இந்த இணைப்பு வசதிகளுக்கு ஏற்ற இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆஸ்டரின் எல்லா வேரியண்ட்களிலும் வழங்கப்பட உள்ளன.

விலை குறைவான ஆஸ்டர் காரில் கூட செல்போன் இணைப்பு வசதி!! வாடிக்கையாளர்களை கவர கொண்டுவரும் எம்ஜி

ஆட்டோமொபைல் துறையிலேயே முதல் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு உதவி வசதியும், இந்தியாவின் எஸ்யூவி கார்கள் பிரிவின் முதல் தானியங்கி நிலை-2 ஓட்டுனர் உதவி தொழிற்நுட்பங்களும் ஆஸ்டரில் வழங்கப்பட உள்ளன என்று எம்ஜி மோட்டார் நிறுவனம் சமீபத்தில் தான் அறிவித்திருந்தது.

விலை குறைவான ஆஸ்டர் காரில் கூட செல்போன் இணைப்பு வசதி!! வாடிக்கையாளர்களை கவர கொண்டுவரும் எம்ஜி

இதற்காக அமெரிக்காவின் ‘ஸ்டார் டிசைன்' என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ‘குட்டி ரோபோட்' போன்ற அமைப்பு டேஸ்போர்டில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு மேலே வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தான் தற்போது மற்றொரு அறிவிப்பாக ஆஸ்டரின் வேரியண்ட்கள் அனைத்திலும் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவிற்கு இணக்காமான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை குறைவான ஆஸ்டர் காரில் கூட செல்போன் இணைப்பு வசதி!! வாடிக்கையாளர்களை கவர கொண்டுவரும் எம்ஜி

இதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போன் உடன் இணைக்கக்கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை விலை குறைவான ஆஸ்டரில் கூட பெறலாம் என்கிறது எம்ஜி நிறுவனம். ஓட்டுனர் தனது பார்வையை சாலையில் இருந்து திருப்புவதையும், ஸ்டேரிங் சக்கரத்தில் இருந்து கை எடுப்பதையும் தவிர்ப்பதில் இந்த சிஸ்டம் உறுதியளிக்கிறது.

விலை குறைவான ஆஸ்டர் காரில் கூட செல்போன் இணைப்பு வசதி!! வாடிக்கையாளர்களை கவர கொண்டுவரும் எம்ஜி

இந்த படத்தில் ஆஸ்டரின் டேஸ்போர்டில் 10.1 இன்ச்சில் வழங்கப்பட உள்ள தனிப்பட்ட செயற்கை நுண்ணறிவு வசதி பெற்ற இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை காணலாம். மேலும் ஆஸ்டர் எஸ்யூவி காரில் ஜியோசாவ்ன் செயலியின் ஆடியோ மற்றும் வீடியோவினையும் கண்டுக்களிக்கலாம் என எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை குறைவான ஆஸ்டர் காரில் கூட செல்போன் இணைப்பு வசதி!! வாடிக்கையாளர்களை கவர கொண்டுவரும் எம்ஜி

ஆஸ்டரில் பொருத்தப்படவுள்ள ‘குட்டி ரோபோட்' ஆனது மனிதனை போன்று சில உணர்வுகள் மற்றும் குரல்களை கொண்டது என கூறுகின்ற எம்ஜி, இது கார் பற்றி மட்டுமின்றி, எந்தவொரு விஷயத்தை பற்றியும் விக்கிபீடியாவின் மூலம் பதிலளிக்கக்கூடியது என்றும் கூறி வருகிறது.

விலை குறைவான ஆஸ்டர் காரில் கூட செல்போன் இணைப்பு வசதி!! வாடிக்கையாளர்களை கவர கொண்டுவரும் எம்ஜி

ஆஸ்டரின் மற்றொரு சிறப்பம்சமாக வழங்கப்பட உள்ள தானியங்கி நிலை-2 ஓட்டுனர் உதவி அமைப்புகளில் தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், முன்பக்கமாக வாகனம் மோதலுக்கு உள்ளாகுவதை எச்சரிக்கும் வசதி, அவசர காலத்தில் தன்னிச்சையாக இயங்கும் ப்ரேக், சாலையில் வாகனம் ஒரே பாதையில் இயங்குவதற்கு உதவி செய்யும் வசதி உள்ளிட்டவை அடங்குகின்றன.

விலை குறைவான ஆஸ்டர் காரில் கூட செல்போன் இணைப்பு வசதி!! வாடிக்கையாளர்களை கவர கொண்டுவரும் எம்ஜி

க்ளோஸ்டர் பிரீமியம் எஸ்யூவி காரில் இத்தகைய வசதிகளை ஒன்றாம் நிலையில் வழங்கும் எம்ஜி நிறுவனம் ஆஸ்டரில் இரண்டாம் நிலையிலேயே வழங்கவுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் போன்ற தற்போதைய முன்னணி எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக கொண்டுவரப்படும் எம்ஜி ஆஸ்டரின் விலைகள் இந்த செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட உள்ளன.

விலை குறைவான ஆஸ்டர் காரில் கூட செல்போன் இணைப்பு வசதி!! வாடிக்கையாளர்களை கவர கொண்டுவரும் எம்ஜிவிலை குறைவான ஆஸ்டர் காரில் கூட செல்போன் இணைப்பு வசதி!! வாடிக்கையாளர்களை கவர கொண்டுவரும் எம்ஜி

விற்பனையில் உள்ள எம்ஜி இசட்.எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் பெட்ரோல் வெர்சன் தான் ஆஸ்டர் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இசட்.எஸ் எலக்ட்ரிக் காரின் பெட்ரோல் மாடல்கள் ஏற்கனவே ஐரோப்பாவில் சில நாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ளன.

விலை குறைவான ஆஸ்டர் காரில் கூட செல்போன் இணைப்பு வசதி!! வாடிக்கையாளர்களை கவர கொண்டுவரும் எம்ஜிவிலை குறைவான ஆஸ்டர் காரில் கூட செல்போன் இணைப்பு வசதி!! வாடிக்கையாளர்களை கவர கொண்டுவரும் எம்ஜி

ஆனால் அதே மாடல் அப்படியே இந்தியாவிற்கு கொண்டுவரப்பட போவதில்லை. நிச்சயம் இதன் தோற்றம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு என சற்று மாற்றியமைக்கப்பட்டிருக்கும். எம்ஜி ஆஸ்டரின் எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles
English summary
MG's new SUV, Astor to come with Apple CarPlay and Android Auto as standard.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X