Just In
- 4 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஷோரூமில் கம்பீரமாக காட்சிதந்த 2021 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் கார்!! தோற்றம் ஆளை மயக்குகிறது..
அறிமுகத்திற்கு முன்னதாக 2021 டொயோட்டா ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வந்தடைய துவங்கியுள்ளன. இதுகுறித்து வெளியாகியுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டில் ஹெக்டர் 5-இருக்கை எஸ்யூவி காரின் மூலம் சந்தையில் அறிமுகமானது. பிரிவில் முதல் மாடலாக பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளை கொண்டதால் எம்ஜி ஹெக்டருக்கு ஆரம்பத்தில் மிக சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

அதன்பின் இரண்டாவது காராக இசட்எஸ் இவி என்ற எலக்ட்ரிக் இந்த பிராண்டில் இருந்து வெளிவந்தது. ஆனால் இது எலக்ட்ரிக் கார் என்பதாலோ என்னவோ ஹெக்டர் அளவிற்கு பிரபலமாகவில்லை.

இவற்றை தொடர்ந்து இந்த 2020 ஜூலையில் 6-இருக்கை ஹெக்டர் ப்ளஸ் ரூ.13.49 லட்சத்தில் இருந்து ரூ.18.54 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனைக்கு வந்தது. இவற்றுடன் ஹெக்டரின் 7-இருக்கை வெர்சனும் இணையவுள்ளதாக எம்ஜி நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பின்படி, 7-இருக்கை ஹெக்டர் இந்த ஜனவரி மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது. இவற்றுடன் ஹெக்டர் பெயர்பலகையை கைவிடும் நோக்கில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இல்லை. இதனால் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரும் விரைவில் வெளிவரவுள்ளது.

ஹெக்டர் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில் அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் வெளிவருகிறது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றிற்கு வந்தடைந்துள்ளது. இதன் படங்கள் காடிவாடி செய்திதளத்தின் மூலமாக கிடைத்துள்ளன.

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் ஹெக்டர் டாப் வேரியண்ட்டாக 4X4 வேரியண்ட்டையும் பெறவுள்ளது. இவற்றுடன் சமீபத்திய க்ளோஸ்டர் முழு-அளவு எஸ்யூவியில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலை 1 ரேடார்-சார்ந்த தானியங்கி தொழிற்நுட்ப வசதியையும் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரில் எதிர்பார்க்கலாம்.

2021 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரில் சிறப்பம்சங்களாக உள்ளீடுகளுடன் ரீடிசைனில் முன்பக்க க்ரில், புதிய இரு-நிற 18-இன்ச் அலாய் சக்கரங்கள், பழுப்பு- கருப்பு என்ற இரு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட கேபின், தன்னிச்சையாக டிம் ஆகக்கூடிய ஐஆர்விஎம், 10.4 இன்ச்சில் அப்டேட் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை வழங்கப்படவுள்ளன.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 143 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 170 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய ஃபியட்டின் 2.0 லிட்டர் டீசல் என்ற அதே இரு என்ஜின்கள்தான் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன. இவை இரண்டுடனும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், பெட்ரோல் என்ஜினிற்கு மட்டும் கூடுதலாக இரட்டை க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனும் வழங்கப்படுகின்றன.

எம்ஜி ஹெக்டரின் விலைகள் தற்சமயம் ரூ.12.84 லட்சத்தில் இருந்து ரூ.18.09 லட்சம் வரையில் உள்ளது. இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனின் விலை மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா கிராவிட்டாஸ் உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக நிர்ணயிக்கப்படும் என்பது உறுதி.