புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முக்கிய அம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மினி கன்ட்ரிமேன் கார் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வெஹிக்கிள் என்ற ரகத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த கார் கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் மற்றும் கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் ஜேசிடபிள்யூ என இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மினி கன்ட்ரிமேன் காரின் டிசைன் பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், புதிய ரேட்டியேட்டர் க்ரில் அமைப்பு, கருப்பு வண்ண கான்ட்ராஸ்ட் கூரை ஆகியவை இதன் வசீகரத்தையும், மதிப்பையும் கூட்டும் புதிய அம்சங்களாக உள்ளன.

புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

கூப்பர் எஸ் வேரியண்ட்டில் 17 அங்குல அலாய் வீல்களும், ஜேசிடபிள்யூ வேரியண்ட்டில் 18 அங்குல அலாய் வீல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஜேசிடபிள்யூ வேரியண்ட்டில் ரன் ஃப்ளாட் வகை டயர்கள் மற்றும் கூடுதலாக ஏரோடைனமிக்ஸ் கிட் ஆக்சஸெரீகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் மாடலின் இன்டீரியர் கார்பன் ப்ளாக் என்ற செயற்கை லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியும், ஜேசிடபிள்யூ மாடலில் பிரிமீயம் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியும், சில்வர் வண்ண அலங்கார பாகங்களும் இடம்பெற்றுள்ளன.

புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரின் கூப்பர் எஸ் வேரியண்ட்டில் 6.5 அங்குல தொடுதிரை சாதனமும், ஜேசிடபிள்யூ மாடலில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் உள்ளன. தவிரவும், ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ள்ஸ்ட்டர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த இரண்டு மாடல்களிலுமே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 189 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பேடில் ஷிஃப்ட் வசதியும் உண்டு.

புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 7.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 225 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மினி கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் மாடலுக்கு ரூ.39.50 லட்சம் விலையும், ஜேசிடபிள்யூ மாடலுக்கு ரூ.43.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொகுசு கார் மார்க்கெட்டில் அடக்கமான வகை மாடலாகவும், தனித்துவமான தேர்வாகவும் இருக்கும்.

Most Read Articles

மேலும்... #மினி #mini
English summary
MINI has introduced the new Countryman in the Indian market. The new MINI Countryman is offered with a starting price of Rs 39.50 lakh, ex-showroom (India). Bookings and test drive for the new MINI Countryman have now begun and will be available at all company dealerships across India.
Story first published: Thursday, March 4, 2021, 18:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X