ஆஃப்ரோடு அம்சங்களுடன் புதிய போர்ஷே டைகன் க்ராஸ் டூரிஷ்மோ எலெக்ட்ரிக் கார்!

ஆஃப்ரோடு பயன்பாட்டு அம்சங்களுடன் புதிய போர்ஷே டைகன் க்ராஸ் டூரிஷ்மோ எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பெரும் கோடீஸ்வரர்களை சுண்டி இழுக்கும் பல்வேறு சொகுசு மற்றும் ஆஃப்ரோடு பயன்பாட்டு அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரின் முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் புதிய போர்ஷே டைகன் க்ராஸ் டூரிஷ்மோ எலெக்ட்ரிக் கார்!

கடந்த 2018ம் ஆண்டு போர்ஷே டைகன் க்ராஸ் டூரிஷ்மோ கார் மாடலானது கான்செப்ட் வடிவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போதே, இந்த கார் பெரும் கோடீஸ்வரர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்த கார் ஆஃப்ரோடு பயன்பாட்டு அம்சங்கள் மற்றும் அதிக இடவசதி கொண்டதாக வர இருப்பதாக வெலியானத் தகவல்கள்தான் முக்கிய காரணங்களாக இருந்து வந்தன.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் புதிய போர்ஷே டைகன் க்ராஸ் டூரிஷ்மோ எலெக்ட்ரிக் கார்!

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் போர்ஷே டைகன் காரைவிட அதிக சொகுசு, இடவசதி மற்றும் ஆஃப்ரோடு அம்சங்களுடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. டைகன் எலெக்ட்ரிக் காரைவிட டைகன் க்ராஸ் டூரிஷ்மோ எலெக்ட்ரிக் கார் முன்புறத்தில் 10 மிமீ கூடுதல் ஹெட்ரூம் இடவசதியையும், பின்புற இருக்கை பயணிகளுக்கு 47 மிமீ கூடுதல் ஹெட்ரூம் கொண்டதாக இருக்கிறது. 1,200 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் புதிய போர்ஷே டைகன் க்ராஸ் டூரிஷ்மோ எலெக்ட்ரிக் கார்!

போர்ஷே டைகன் எலெக்ட்ரிக் காரைவிட நீளத்திலும், உயரத்திலும் பெரிதாக இருப்பதால் தோற்றத்திலும் மிக முக்கிய மாற்றம் தெரிகிறது. இந்த காரில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, 30 மிமீ வரை க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகரிக்க முடியும்.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் புதிய போர்ஷே டைகன் க்ராஸ் டூரிஷ்மோ எலெக்ட்ரிக் கார்!

புதிய போர்ஷே டைகன் க்ராஸ் டூரிஷ்மோ எலெக்ட்ரிக் கார் 93.4kWh பேட்டரி மற்றும் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வர இருக்கிறது. எனினும், டைகன் 4, டைகன் 4எஸ், டைகன் டர்போ மற்றும் டைகன் டர்போ எஸ் என நான்குவிதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் புதிய போர்ஷே டைகன் க்ராஸ் டூரிஷ்மோ எலெக்ட்ரிக் கார்!

இதில், டைகன் 4 க்ராஸ் டூரிஷ்மோ வேரியண்ட் அதிகபட்சமாக 380 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். லான்ச் கன்ட்ரோல் மோடில் வைத்து இயக்கும்போது 476 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 225 கிமீ வேகம் வரை செல்லும். இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் சாதாரண மோடில் 456 கிமீ தூரம் வரை அதிகபட்சமாக பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். லான்ச் கன்ட்ரோல் மோடில் ரேஞ்ச் வெகுவாக குறையும்.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் புதிய போர்ஷே டைகன் க்ராஸ் டூரிஷ்மோ எலெக்ட்ரிக் கார்!

டைகன் 4எஸ் க்ராஸ் டூரிஷ்மோ வேரியண்ட்டானது 490 பிஎஸ் பவரையும், லான்ச் கன்ட்ரோல் மோடில் 571 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 4.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் புதிய போர்ஷே டைகன் க்ராஸ் டூரிஷ்மோ எலெக்ட்ரிக் கார்!

டைகன் டர்போ க்ராஸ் டூரிஷ்மோ வேரியண்ட்டானது 625 பிஎஸ் பவரையும், லான்ச் கன்ட்ரோல் மோடில் வைத்து இயக்கும்போது 680 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 452 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் புதிய போர்ஷே டைகன் க்ராஸ் டூரிஷ்மோ எலெக்ட்ரிக் கார்!

இந்த காரின் விலை உயர்ந்த டாப் வேரியண்ட்டாக டைகன் டர்போ எஸ் வேரியண்ட்டானது 625 பிஎஸ் பவரையும், லான்ச் கன்ட்ரோல் மோடில் 761 பிஎஸ் பவரையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 419 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் புதிய போர்ஷே டைகன் க்ராஸ் டூரிஷ்மோ எலெக்ட்ரிக் கார்!

இந்த கார் பின்புறம் தாழ்ந்த கூரை அமைப்பு, பம்பர்கள் மற்றும் பக்கவாட்டு சில் அமைப்புகளில் விசேஷ பிளாஃப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காருக்கான பின்புற கேரியரில் மூன்று சைக்கிள்களை பொருத்தி எடுத்து செல்ல முடியும்.

Most Read Articles

மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsche has revealed Taycan Cross Turismo electric car with Off-Road capability globally.
Story first published: Friday, March 5, 2021, 11:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X