கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது லேண்ட்ரோவர் நிறுவனம். இந்த புதிய மாடலின் முக்கிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் சொகுசு எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் ஆர்-டைனமிக் எஸ் என்ற வேரியண்ட்டில் கிடைக்கும். புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவிக்கு ரூ.79.87 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலைவிட அதிக பாதுகாப்பு, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உலகின் சிறந்த சொகுசு எஸ்யூவிகளில் ஒன்றாக மேம்படுத்தப்பட்டு இருப்பதாக லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவியில் 3டி சர்ரவுண்ட் கேமரா, எலெக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஷன், பிஎம்2.5 ஃபில்டருடன் கூடிய கேபின் ஏர் ஐயோனைசேஷன் வசதி, பிவி புரொ செயலியுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 247 பிஎச்பி பவரையும், 365 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும, 430 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எஸ்யூவியில் டார்க் ஆன் டிமான்ட் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஆல் வீல் டிரைவ்சிஸ்டம், டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் 2 மற்றும் ஓட்டுனருக்கு உதவிகரமான பல தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் ஆர் டைனமிக் எஸ் வேரியண்ட்டில் காப்பர் அலங்கார பாகங்களுடன் பம்பர், பானட் மற்றும் சைடு வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு வண்ணப் பூச்சுடன் கூரை இடம்பெற்றுள்ளது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் எலெக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஷன், பனோரமிக் சன்ரூஃப், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், மெரிடியன் ஸ்டீயரியோ சிஸ்டம், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவையும் மிக முக்கிய அம்சங்களாக உள்ளன.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். டெலிவிரிப் பணிகளும் இன்று துவங்குவதாக லேண்ட்ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
LandRover has launched the new Range Rover Velar SUV with additional features in India with a starting price of Rs 79.87 lakh (ex-showroom).
Story first published: Wednesday, June 16, 2021, 13:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X