Just In
- 18 min ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 19 min ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 56 min ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 1 hr ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- News
வளைச்சு வளைச்சு மீட்டிங்.. கடந்த ஆண்டே எச்சரிக்கை.. ஆக்சிஜனை 'கோட்டை' விட்டது யார்?
- Movies
மாரி செல்வாராஜூடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகாஸ்!
- Finance
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?
- Sports
‘சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணிக்காய்’.. நடராஜன் விலகலில் எழுந்த சர்ச்சை.. உண்மை காரணம் என்ன?
- Education
கோவையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? அழைக்கும் ICAR நிறுவனம்!
- Lifestyle
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் பழைய தோற்றத்திற்கு திரும்பும் டாடா நெக்ஸான்!! ஆனா உண்மையில் இதுதான் நல்லாருக்கு!
எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரின் மேற்கூரை தோற்றத்தை மீண்டும் மாற்றியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள ஸ்பை படத்தினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகரித்துவரும் போட்டியினால் நெக்ஸான் பிஎஸ்6 காரில் இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் சில காஸ்மெட்டிக் அப்கிரேட்களுடன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கொண்டுவந்திருந்தது.

இந்த காஸ்மெட்டிக் அப்கிரேட்கள் முக்கியமாக காரின் முன்பக்கத்திற்கு தான் வழங்கப்பட்டு இருந்தன. அதேநேரம் நெக்ஸானின் மேற்கூரை தோற்றத்தையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறிது திருத்தியமைத்திருந்தது.

ஆனால் தற்போது மீண்டும் நெக்ஸானின் பழைய மேற்கூரைக்கே டாடா நிறுவனம் திரும்பியுள்ளதுபோல் தெரிகிறது. ஏனெனில் டீம் பிஎச்பி செய்திதளம் மூலம் கிடைத்துள்ள மேலே உள்ள இதுதொடர்பான படத்தில், விற்பனையில் உள்ள நெக்ஸானின் மேற்கூரையில் இருந்து வேறுப்பட்ட தோற்றத்திலான மேற்கூரையை கொண்ட நெக்ஸான் காரை பார்க்க முடிகிறது.

நெக்ஸானின் பழைய மேற்கூரை பின்பக்க B-பில்லர்களில் இருந்து முன்பக்க A-பில்லர்களை வரையில் முழுமையாக வந்தடையாது. அவ்வாறான மேற்கூரை உடன்தான் இந்த நெக்ஸானும் காட்சியளிக்கிறது. இருப்பினும் மேற்கூரை தண்டவாளங்களிலும், பின்புறத்தில் மேற்கூரை சரிவிலும் புதிய நுட்பத்தை டாடா நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இவை தவிர்த்து இந்த நெக்ஸான் காரில் வேறெந்த மாற்றத்தை பார்க்க முடியவில்லை. நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 108 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.95 லட்சத்தில் இருந்து ரூ.12.70 லட்சம் வரையில் உள்ளன. நெக்ஸானில் இவ்வாறு மேற்கூரை மீண்டும் மாற்றப்பட்டிருப்பது விற்பனை வாகனங்களின் தோற்றத்தை தொடர்ச்சியாக புத்துணர்ச்சியாக்க வேண்டும் என்ற டாடாவின் எண்ணத்தை காட்டுகிறது.