அதிரடியாக உயருகிறதா ஹிமாலயனின் ஷோரூம் விலை? என்ன செய்ய இருக்கிறது ராயல்என்பீல்டு நிறுவனம்...

புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை பற்றிய விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அதிரடியாக உயருகிறதா ஹிமாலயனின் ஷோரூம் விலை? என்ன செய்ய இருக்கிறது ராயல்என்பீல்டு நிறுவனம்...

ராயல் என்பீல்டு நிறிவனம் மிக விரைவாகவே இந்தியாவில் பிரபலமாகிவிட்ட ஹிமாலயனின் புதிய தலைமுறையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இருப்பினும் இந்த அறிமுகம் குறித்த தேதி எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.

அதிரடியாக உயருகிறதா ஹிமாலயனின் ஷோரூம் விலை? என்ன செய்ய இருக்கிறது ராயல்என்பீல்டு நிறுவனம்...

இந்த நிலையில் தற்போது புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை பற்றிய விபரங்கள் புல்லட் குரு என்ற யுடியூப் பக்கத்தின் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் 2021 ஹிமாலயனின் நேரலையின் போது இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விபரங்களின்படி பார்க்கும்போது 2021 ஹிமாலயன் ரூ.2,51,565 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த விலை கூடுதல் ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட பின்னர் இதன் விலையா அல்லது பைக்கின் விலையே இவ்வளவா என்பது தெரியவில்லை.

அதிரடியாக உயருகிறதா ஹிமாலயனின் ஷோரூம் விலை? என்ன செய்ய இருக்கிறது ராயல்என்பீல்டு நிறுவனம்...

ஏனெனில் இந்த விலை ஹிமாலயனின் தற்போதைய விலையை காட்டிலும் சுமார் ரூ.20 ஆயிரம் அதிகமாகும். இந்த சந்தேகத்தை தீர்த்து கொள்ள பைக்கின் அறிமுகம் வரையில் நாம் காத்திருந்தாக வேண்டும். 2021 ஹிமாலயன் அதன் தோற்றத்தை காட்டிலும் செயல்பாடுகளில்தான் மேம்பாடுகளை ஏற்றுள்ளது.

அதிரடியாக உயருகிறதா ஹிமாலயனின் ஷோரூம் விலை? என்ன செய்ய இருக்கிறது ராயல்என்பீல்டு நிறுவனம்...

இருப்பினும் பைக்கை புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்டுவதற்காக பைன் க்ரீன், மைரேஜ் சில்வர் மற்றும் க்ரானைட் ப்ளாக் என்ற மூன்று விதமான நிறங்களில் இந்த பைக் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது. அதேபோல் இருக்கையும் பழுப்பு நிறத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. அதேநேரம் தற்போதைய சில நிறத்தேர்வுகளும் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடியாக உயருகிறதா ஹிமாலயனின் ஷோரூம் விலை? என்ன செய்ய இருக்கிறது ராயல்என்பீல்டு நிறுவனம்...

மேலும் ஓட்டுனரின் பாதுகாப்பிற்காக முன்பக்க விண்ட்ஷீல்டின் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், பின்பார்க்க உதவும் கண்ணாடி, பெட்ரோல் டேங்க், நேர்த்தியான டர்ன் இண்டிகேட்டர்கள், மேலே திருப்பப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் அமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது.

Most Read Articles
English summary
New Royal Enfield Himalayan Leaks Via Official Website – 2021 Price Rs 2.51 L
Story first published: Thursday, January 28, 2021, 11:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X