செக்மென்ட்டிலேயே பெரிய காராக மாறும் புதிய ஸ்கோடா ரேபிட்!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் பெரிய கார் மாடலாக புதிய ஸ்கோடா ரேபிட் கார் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கார் குறித்த புதிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 செக்மென்ட்டிலேயே பெரிய காராக மாறும் புதிய ஸ்கோடா ரேபிட்!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக மவுசு இருந்து வருகிறது. தனித்துவமான வாடிக்கையாளர் வட்டத்தையும் இந்த கார் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட முக்கிய மாடல்கள் அதிகப்படியான மாறுதல்களுடன் சந்தைக்கு வந்துவிட்ட நிலையில், ரேபிட் கார் நீண்ட காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையில் இருந்து வருகிறது.

 செக்மென்ட்டிலேயே பெரிய காராக மாறும் புதிய ஸ்கோடா ரேபிட்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ரேபிட் காருக்கு மாற்றாக முற்றிலும் புதிய கார் மாடலை ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

 செக்மென்ட்டிலேயே பெரிய காராக மாறும் புதிய ஸ்கோடா ரேபிட்!

ரேபிட் காரிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மாடலாக இந்த கார் வர இருக்கிறது. அதாவது, இந்த கார் புதிய ஹோண்டா சிட்டி போன்றே, பரிமாணத்தில் பெரிய கார் மாடலாக இருக்கும். மேலும், இதன் ரக கார்களிலேயே மிகவும் பெரிய கார் மாடலாகவும், அதிக வீல்பேஸ் நீளம் கொண்டதாகவும் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

 செக்மென்ட்டிலேயே பெரிய காராக மாறும் புதிய ஸ்கோடா ரேபிட்!

இதனால், ரேபிட் காருக்கு மாற்றாக வரும் புதிய செடான் கார் உட்புற இடவசதியிலும், பூட்ரூம் இடவசதியிலும் மிகப்பெரிய கார் மாடலாக இருக்கும் என்பது தெரிய வநதுள்ளது. இந்த கார் MQB AO IN என்ற இந்தியாவுக்கான பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட இருக்கிறது.

 செக்மென்ட்டிலேயே பெரிய காராக மாறும் புதிய ஸ்கோடா ரேபிட்!

ஸ்கோடா நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் அமைப்பு, அகலமான ஏர் டேம் பகுதி, வலிமையான பானட் அமைப்பு, கூர்மையான பாடி லைன்களுடன் மிகவும் வசீகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 செக்மென்ட்டிலேயே பெரிய காராக மாறும் புதிய ஸ்கோடா ரேபிட்!

ஸ்கோடாவின் புதிய மிட்சைஸ் செடான் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இதில், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 115 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

 செக்மென்ட்டிலேயே பெரிய காராக மாறும் புதிய ஸ்கோடா ரேபிட்!

இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். அதாவது, விரைவில் வரும் ஸ்கோடா குஷாக் காரில் வழங்கப்படும் அதே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்த புதிய மிட்சைஸ் செடான் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Via - Gaadiwaadi

Most Read Articles
--

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
According to report, new Skoda midsize sedan car to have longest in it's segment.
Story first published: Monday, May 31, 2021, 12:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X