2021 ஸ்கோடா ஆக்டேவியா செடானின் இந்திய வருகை எப்போது? ஸ்கோடா சிஇஒ பதில்...

2021 ஸ்கோடா ஆக்டேவியா காரின் இந்திய அறிமுகம் எப்போது என்பது குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக நிறுவனத்தின் சிஇஒ தெரிவித்துள்ளார். அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ஸ்கோடா ஆக்டேவியா செடானின் இந்திய வருகை எப்போது? ஸ்கோடா சிஇஒ பதில்...

ஸ்கோடா இந்தியா நிறுவனம் இன்னமும் அதன் விற்பனை கார்களின் வரிசையை பிஎஸ்4-இல் இருந்து பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யவில்லை. இவ்வாறு அப்டேட் செய்யப்படாத கார்களில் பிராண்டின் பிரபலமான ஆக்டேவியா கார் மாடலும் ஒன்றாக உள்ளது.

2021 ஸ்கோடா ஆக்டேவியா செடானின் இந்திய வருகை எப்போது? ஸ்கோடா சிஇஒ பதில்...

இந்த நிலையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சேவை & சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், புதிய தலைமுறை ஆக்டேவியா கார் இந்தியாவில் அடுத்த இரு மாதங்களில் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளார்.

2021 ஸ்கோடா ஆக்டேவியா செடானின் இந்திய வருகை எப்போது? ஸ்கோடா சிஇஒ பதில்...

அறிமுகத்திற்கு முன்னதாக இந்த செடான் காரை சில முறை சோதனை ஓட்டங்களின் போது பார்த்துள்ளோம். புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா ஏற்கனவே சில நாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்சமயம் விற்பனையில் உள்ளது.

2021 ஸ்கோடா ஆக்டேவியா செடானின் இந்திய வருகை எப்போது? ஸ்கோடா சிஇஒ பதில்...

அப்கிரேட் செய்யப்பட்ட ஆக்டேவியா காரில் அதன் முந்தைய பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் நேர்த்தியான டிசைனில் முன்பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி முன்பக்க பட்டாம்பூச்சி வடிவிலான க்ரில் சற்று அகலமானதாகவும், கூர்மையானதாகவும் கொண்டுவரப்பட்டுள்ளது.

2021 ஸ்கோடா ஆக்டேவியா செடானின் இந்திய வருகை எப்போது? ஸ்கோடா சிஇஒ பதில்...

அதேபோல் வடிவம் மாற்றியமைக்கப்பட்ட முன் பம்பர் ஆனது அகலமான ஏர் டேம் மற்றும் இரு முனைகளிலும் கிடைமட்ட வடிவிலான எல்இடி ஃபாக் விளக்குகள் அவற்றை இணைக்கும் க்ரோம் ஸ்ட்ரிப் உள்ளிட்டவற்றை தாங்கியுள்ளது.

2021 ஸ்கோடா ஆக்டேவியா செடானின் இந்திய வருகை எப்போது? ஸ்கோடா சிஇஒ பதில்...

2021 ஆக்டேவியா காரில் நேர்த்தியான வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப்கள் உடன் பிராண்டின் மேட்ரிக்ஸ் எல்இடி தொழிற்நுட்பமும் கூடுதல் தேர்வாக வெளிநாட்டு சந்தைகளில் வழங்கப்படுகிறது. பின்பக்கத்தில் புதிய கூர்மையான கதவை பெற்றுள்ள 2021 ஆக்டேவியா காரில் அலாய் சக்கரங்களும் புதிய டிசைனில் வழங்கப்பட்டுள்ளன.

2021 ஸ்கோடா ஆக்டேவியா செடானின் இந்திய வருகை எப்போது? ஸ்கோடா சிஇஒ பதில்...

உட்புறத்தில் புதிய தலைமுறை ஆக்டேவியா கார் முற்றிலும் புதிய கேபின் லேஅவுட்டை பிராண்டின் லேட்டஸ்ட் வசதிகள் மற்றும் தொழிற்நுட்பங்களுடன் பெற்றுள்ளது. இதில் ஆடியோ உள்ளிட்ட செயல்பாடுகளுக்கான கண்ட்ரோல்களுடன் புதிய 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரமும் ஒன்றாகும்.

2021 ஸ்கோடா ஆக்டேவியா செடானின் இந்திய வருகை எப்போது? ஸ்கோடா சிஇஒ பதில்...

2021 ஆக்டேவியாவின் உட்புற கேபினில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று, தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு ஒன்று என இரு 10.25 இன்ச் திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 3-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக், கேண்டனின் ப்ரீமியம் சவுண்ட் சிஸ்டம், 5 யுஎஸ்பி-சி துளைகள் உள்ளிட்டவையும் இந்த அப்கிரேட் செய்யப்பட்ட செடானில் வழங்கப்பட்டுள்ளன.

2021 ஸ்கோடா ஆக்டேவியா செடானின் இந்திய வருகை எப்போது? ஸ்கோடா சிஇஒ பதில்...

1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டரில் இரு டிஎஸ்ஐ என்ஜின்கள் இந்த அப்கிரேட் செய்யப்பட்ட ஸ்கோடா காரில் வழங்கப்படுகின்றன. இவை இரண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் நன்கு பிரகாசமாகவே உள்ளது.

2021 ஸ்கோடா ஆக்டேவியா செடானின் இந்திய வருகை எப்போது? ஸ்கோடா சிஇஒ பதில்...

இதில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ, 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனும் இணைக்கப்படுகின்றன. குறிப்பிடத்தக்க அப்கிரேட்களினால் பிஎஸ்6 ஆக்டேவியாவின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
New Skoda Octavia will be launched within the next 2 months. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X