அடுத்த மாதத்தில் அறிமுகமாகும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! சிஇஒ உறுதிப்படுத்தினார்...

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் இந்திய வருகை குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

அடுத்த மாதத்தில் அறிமுகமாகும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! சிஇஒ உறுதிப்படுத்தினார்...

ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படும் கார்களுள் ஒன்று 2021 ஆக்டேவியா. இந்த புதிய தலைமுறை செடான் காரின் வருகையை பலர் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் 2021 ஆக்டேவியா அடுத்த ஜூன் மாதத்தில் அறிமுகமாகவுள்ளதாம்.

அடுத்த மாதத்தில் அறிமுகமாகும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! சிஇஒ உறுதிப்படுத்தினார்...

இதனை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சேவை & சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். புதிய ஆக்டேவியாவின் இந்திய வருகை முன்னதாக இந்த 2021 மே மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

அடுத்த மாதத்தில் அறிமுகமாகும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! சிஇஒ உறுதிப்படுத்தினார்...

ஆனால் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் இதன் அறிமுகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட எம்க்யுபி ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள 2021 ஆக்டேவியா செடான் தற்போதைய மாடலை காட்டிலும் அளவில் பெரியதாக உள்ளது.

அடுத்த மாதத்தில் அறிமுகமாகும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! சிஇஒ உறுதிப்படுத்தினார்...

இதன் காரணமாக புதிய ஆக்டேவியா கிட்டத்தட்ட அதனை காட்டிலும் பெரிய தோற்றத்தை கொண்ட சூப்பர்ப் காரை ஒத்து காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த இரு செடான் கார்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வடிவில் தான் ஹெட்லேம்ப்கள் மற்றும் க்ரில், க்ரீஸ் லைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதத்தில் அறிமுகமாகும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! சிஇஒ உறுதிப்படுத்தினார்...

ஒரே ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள இந்த காரின் உட்புறத்தில் ஃப்ரீ-ஸ்டாண்டிங் தொடுத்திரை உடன் சூப்பர்ப் & குஷாக் எஸ்யூவி கார்களை போல் 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்தில் அறிமுகமாகும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! சிஇஒ உறுதிப்படுத்தினார்...

புதிய ஆக்டேவியாவில் வழங்கப்பட்டுள்ள 2.0 லிட்டர், டிஎஸ்ஐ டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 7-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்தில் அறிமுகமாகும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! சிஇஒ உறுதிப்படுத்தினார்...

ஆனால் முந்தைய தலைமுறை ஆக்டேவியாவில் டீசல் என்ஜின் தேர்வும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஸ்கோடா ஆக்டேவியாவிற்கு விற்பனையில் ஹூண்டாய் எலண்ட்ரா செடான் கார் மட்டுமே போட்டியாக உள்ளது.

அடுத்த மாதத்தில் அறிமுகமாகும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! சிஇஒ உறுதிப்படுத்தினார்...

ஆரம்பத்தில் ஹோண்டாவும் தனது சிவிக் மாடலின் மூலமாக போட்டியளித்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது இந்த ஹோண்டா செடான் கார் இந்தியாவில் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆக்டேவியா உடன் குஷாக் எஸ்யூவி மற்றும் கோடியாக் எஸ்யூவி கார்களையும் இந்தியாவில் இந்த வருடத்திற்குள்ளாக அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Plan To Launch Octavia At The End Of Next Month.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X