ஸ்கோடா ராபிட் மேட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.99 லட்சம்

புதிய ஸ்கோடா ராபிட் மேட் எடிசன் இந்திய சந்தையில் ரூ.11.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கோடாவின் இந்த புதிய செடான் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடா ராபிட் மேட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.99 லட்சம்

ராபிட் செடான் மாடலில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த ஸ்பெஷல் எடிசனிற்கு மேட் எடிசன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரூ.11.99 லட்சம் என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய வேரியண்ட்டை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகளிலும் பெறலாம்.

ஸ்கோடா ராபிட் மேட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.99 லட்சம்

வழக்கமான ஸ்கோடா ராபிட் கார்களில் இருந்து வேறுப்படுவதற்காக ராபிட் மேட் எடிசன் பிரத்யேகமான பெயிண்ட் தேர்வையும் சில கூடுதல் வசதிகளையும் பெற்று வந்துள்ளது. புதிய ராபிட் மேட் எடிசனின் கார்பன் இரும்பு மேட் நிறம் அதன் செடான் தோற்றத்திற்கு மிகவும் எடுப்பாக உள்ளதை இந்த இடத்தில் கூறியே ஆக வேண்டும்.

ஸ்கோடா ராபிட் மேட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.99 லட்சம்

இந்த அடர் கருப்பு நிறம் காரின் ஸ்டைலை ஸ்போர்டியானதாக மாற்றியுள்ளது. கார்பன் கருப்பு நிற பெயிண்ட்டிற்கு ஏற்ப காரின் முன்பக்க க்ரில், கதவு கைப்பிடிகள் மற்றும் முன்பக்க & பின்பக்க ஸ்பாய்லர்களில் பளபளப்பான கருப்பு நிற தொடுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் பக்கவாட்டு மோல்டிங் மற்றும் பின்பக்க ஸ்பாய்லர் பகுதிகளிலும் தனித்து தெரியக்கூடிய கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா ராபிட் மேட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.99 லட்சம்

இவ்வளவு ஏன், காரின் 16-இன்ச் அலாய் சக்கரங்கள் கூட கருப்பு நிறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. வெளிப்புறத்திற்கு ஏற்ப புதிய ராபிட் மேட் காரின் உட்புறமும் டெல்லூர் க்ரே தீம்-இல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் அனைத்தும் கருப்பு நிற லெதரால், அல்காண்ட்ரா உள்ளமைவுகள் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா ராபிட் மேட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.99 லட்சம்

இவ்வாறான தோற்ற வேறுப்பாடுகளுடன் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் கார் 6.5 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பின்பக்கத்தை காட்டும் கேமிரா மற்றும் யுஎஸ்பி சார்ந்த காற்று சுத்திகரிப்பான் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளது. அத்துடன் 'RAPID' எழுத்து பொறிக்கப்பட்ட இரும்பு ஸ்கஃப் தட்டுகளையும் இந்த ஸ்பெஷல் எடிசன் பெற்றுவந்துள்ளது.

ஸ்கோடா ராபிட் மேட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.99 லட்சம்

ராபிட் செடான் காரில் ஸ்கோடா நிறுவனம் வழங்கும் மற்ற அம்சங்களாக, டைமர் உடன் பின்பக்க விண்ட்ஸ்க்ரீன் டீஃபாக்கர், ரிவர்ஸில் செல்வதற்கு உதவியாக பார்க்கிங் சென்சார்கள், கண்ணை கூசக்கூடிய ஒளியினை தவிர்க்கும் பின்பக்கத்தை காட்டும் உட்புற கண்ணாடி, மூன்று-புள்ளிகளாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சீட்பெல்ட்கள் மற்றும் இரட்டை முன்பக்க காற்றுப்பைகள் & ஏபிஎஸ் உள்ளிட்டவை உள்ளன.

ஸ்கோடா ராபிட் மேட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.99 லட்சம்

இவற்றுடன் வழக்கமாக ஸ்கோடா ராபிட்டில் பொருத்தப்படும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் தான் புதிய மேட் எடிசனிலும் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 109 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஸ்கோடா ராபிட் மேட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.99 லட்சம்

இதனால் ஏற்கனவே கூறியதுபோல், ஸ்கோடா ராபிட் செடான் மாடலின் புதிய ஸ்பெஷல் எடிசனையும் மேனுவல் & ஆட்டோமேட்டிக் தேர்வில் பெறலாம். இந்த புதிய எடிசனின் வருகைக்கு முன்னதாக சமீபத்தில் தான் ராபிட் மாடலின் ரைடர் ப்ளஸ் வேரியண்ட்டின் விற்பனையை ஸ்கோடா நிறுத்தி இருந்தது.

ஸ்கோடா ராபிட் மேட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.99 லட்சம்

ராபிட் செடானின் ரைடர் ப்ளஸ் வேரியண்ட்டை கடந்த 2020ல் ஸ்கோடா இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. துரதிர்ஷ்டவசமாக இந்த வேரியண்ட் பெரியளவில் வாடிக்கையாளர்களை கவராததால் வந்த வேகத்திலேயே சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.99 லட்சமாக இருந்தது.

ஸ்கோடா ராபிட் மேட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.99 லட்சம்

இவ்வாறு வேரியண்ட்களின் லைன்-அப்பில் அடிக்கடி மாற்றங்களை ஏற்றுவரும் ராபிட் செடானின் விற்பனை இந்தியாவில் நீண்ட மாதத்திற்கு இருக்காது என ஏற்கனவே ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஸாக் ஹோலிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் ராபிட்டின் இடத்தை பூர்த்தி செய்யும் புதிய செடான் காரை இந்தியாவிற்கு கொண்டுவர தற்சமயம் ஸ்கோடா நிறுவனம் தயாராகி வருகிறது.

ஸ்கோடா ராபிட் மேட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.99 லட்சம்

புதிய எம்க்யூபி ஏ0 இன் (இந்தியா) ப்ளாட்ஃபாரத்தில் இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்படுவதாக கூறப்படும் இந்த புதிய செடான் கார், அளவில் ராபிட்டை காட்டிலும் சற்று பெரியதாக உள்ளது. இதனால் உட்புறத்தில் நன்கு விசாலமான இடத்தை எதிர்பார்க்கலாம். இந்த தகவல்கள் அனைத்தும் அதன் சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் தெரிய வந்திருந்தது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Rapid Matte Edition launched at Rs. 11.99 lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X