Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் சூப்பர்ப் செடான் காரின் அப்டேட் வெர்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.31.99 லட்சத்தில் (ஸ்போர்ட்லைன் ட்ரிம்) இருந்து ரூ.34.99 லட்சம் (லாரின் & க்ளேமெண்ட் ட்ரிம்) என்ற இரு விலைகளில் 2021 சூப்பர்ப் கார் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் கார் கடந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வந்தது.

ஸ்போர்ட்லைன் மற்றும் எல்&கே வேரியண்ட்களில் சில புதிய தொழிற்நுட்ப வசதிகள் விலை அதிகரிப்புக்கு ஏற்ற கொண்டுவரப்பட்டுள்ளன. 2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரில் எல்இடி டிஆர்எல்களுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி தரத்தில் டர்ன் இண்டிகேட்டர்கள், கார்னரிங்/லீவிங் ஹோம் செயல்பாடு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் முன்பக்கத்தில் ரேடியேட்டர் க்ரில் அமைப்பை இந்த கார் ஸ்போர்டியான வடிவத்தில் கொண்டுள்ளது. புதிய அடாப்டிவ் ஹெட்லேம்ப் சிஸ்டம் வெவ்வேறான வேகத்தில், ஒளியில் மற்றும் நகரம், மோட்டார்வே மற்றும் மழை என வெவ்வேறான ட்ரைவிங் மோட்களில் வெவ்வேறான சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும்.

மூடுபனி விளக்குகள் நான்கு குழிகளில் பொருத்தப்பட்டுள்ளன. உட்புறத்தில் பளபளப்பான டிசைனில் சென்சார் மற்றும் அப்டேட்டான பயனர் இண்டர்ஃபேஸ் உடன் 20.32 செ.மீ-ல் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை இந்த 2021 செடான் மாடல் பெற்றுள்ளது.

இந்த புதிய தலைமுறை அமுண்ட்சன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழக்கமான வாய்ஸ் கண்ட்ரோல் வசதியுடன் நாவிகேஷன், மிரர்லிங் உடன் ஸ்மார்ட்லிங் உள்ளிட்ட வசதிகளையும் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி புதிய டைப் சி யுஎஸ்பி துளைகள், ப்ளூடூத் ஜிஎஸ்எம் டெலிபோனி மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங் தேர்வுகளும் 2021 சூப்பர்ப் கேபினில் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஹெட்ரெஸ்ட்கள் உடன் அல்காண்ட்ரா ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், விர்டியுவல் காக்பிட், ஹேண்ட்ஸ்-ப்ரீ பார்க் அசிஸ்ட், 360-கோண கேமிரா உள்ளிட்டவற்றையும் புதிய சூப்பர்ப் காரில் ஸ்கோடா நிறுவனம் வழங்கியுள்ளது.

கேபின் பியனோ கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவே எல்&கே வேரியண்ட்டில் பாறையின் பழுப்பு நிறத்தில் கேபினை பெறலாம். ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டில் 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரமும், எல்&கே வேரியண்ட்டில் 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரமும் வழங்கப்படும்.

மற்றப்படி என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் 2021 சூப்பர்ப் செடானிலும் அதே 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின்தான் தொடரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 188 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

இந்தியாவில் சூப்பர்ப் செடான் கார் முதன்முதலாக 2004ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே இந்த ஸ்கோடா ப்ரீமியம் செடான் கார் வாடிக்கையாளர்களிடம் இருந்து கணிசமான வரவேற்பை பெற்று வரவேற்பு வருகிறது. இதற்கு புதிய 2021 வெர்சன் உதவியாக இருக்கும் என்பது உறுதி.