2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரின் இந்திய அறிமுகம் குறித்த விபரம்!! கார் எப்போது வரும்?

அப்டேட் செய்யப்பட்ட 2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரின் இந்திய அறிமுகம் குறித்த விபரம்!! கார் எப்போது வரும்?

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் சூப்பர்ப் செடான் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. அதனை தொடர்ந்து சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் கார் கடந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரின் இந்திய அறிமுகம் குறித்த விபரம்!! கார் எப்போது வரும்?

ரூ.29.9 லட்சத்தில் இருந்து ரூ.32.99 லட்சம் வரையிலான விலைகளில் சந்தைப்படுத்தப்பட்ட 2020 சூப்பர்ப் காரில் காஸ்மெட்டிக் அப்கிரேட்களுடன் புதிய தொழிற்நுட்ப அம்சங்களும் வழங்கப்பட்டன.

2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரின் இந்திய அறிமுகம் குறித்த விபரம்!! கார் எப்போது வரும்?

இந்த நிலையில் ஸ்கோடாவின் இந்த டி-பிரிவு செடான் கார் 2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேடை விரைவில் இந்தியாவில் பெறவுள்ளது. மை2021 சூப்பர்ப் மாடலின் இந்திய அறிமுகம் மிக விரைவில் இருக்கும் என காடிவாடி செய்திதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரின் இந்திய அறிமுகம் குறித்த விபரம்!! கார் எப்போது வரும்?

புதிய அப்கிரேட்களின்படி, சூப்பர்ப் செடான் மாடலின் ஸ்போர்ட்லைன் மற்றும் எல்&கே வேரியண்ட்கள் புதிய தொழிற்நுட்ப வசதிகளை பெற்றுவரவுள்ளன. இந்த வகையில் ஸ்போர்ட்லைனில் ஸ்போர்ட்லைன் முத்திரையுடன் புதிய ஸ்டேரிங் சக்கரத்தை எதிர்பார்க்கலாம்.

2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரின் இந்திய அறிமுகம் குறித்த விபரம்!! கார் எப்போது வரும்?

அதேபோல் விர்டியுவல் காக்பிட் உடன் எல்&கே புதிய 2-ஸ்ட்ரோக் ஸ்டேரிங் சக்கரத்தை பெற்றிருக்கும். இரு வேரியண்ட்களிலும் மற்ற கவனிக்கக்கூடிய அம்சங்கள் என்று பார்த்தால், யுஎஸ்பி-சி துளை, எம்ஐபி3 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எஸ்டி கார்டை ஏற்கக்கூடிய பில்ட்-இன் நாவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.

2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரின் இந்திய அறிமுகம் குறித்த விபரம்!! கார் எப்போது வரும்?

இவை மட்டுமின்றி ஹேண்ட்ஸ்-ப்ரீ பார்க் அசிஸ்ட் மற்றும் 360-கோண கேமிரா, வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி உள்ளிட்டவற்றை பெற்றுவரும் 2021 ஸ்கோடா சூப்பர்ப்-இல் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்பட போவதில்லை.

2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரின் இந்திய அறிமுகம் குறித்த விபரம்!! கார் எப்போது வரும்?

இதனால் வழக்கமான 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினில் தான் இந்த 2021 ஸ்கோடா காரும் விற்பனை செய்யப்படவுள்ளது. அதிகப்பட்சமாக 188 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் சூப்பர்ப் செடானில் 7-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரின் இந்திய அறிமுகம் குறித்த விபரம்!! கார் எப்போது வரும்?

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் அதன் பெரும்பான்மையான கார் மாடல்களின் விலைகளை இந்தியாவில் உயர்த்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக விரைவில் சந்தையில் அறிமுகமாகவுள்ள 2021 சூப்பர்ப் காரின் விலையை உயர்த்தப்படலாம்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Updated 2021 Skoda Superb Launching Soon In India; Details Inside
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X