ஸ்கோடாவின் புதிய 2021 எஸ்யூவி காரின் பெயர் என்னவாக இருக்கும்? மிகுந்த ஆர்வத்தில் நெட்டிசன்கள்...

விஷன் இன் எஸ்யூவி காருக்கு விரைவில் அதிகாரப்பூர்வ பெயரை வழங்கவுள்ளதாக ஸ்கோடா நிறுவனத்தின் சிஇஓ-வே தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடாவின் புதிய 2021 எஸ்யூவி காரின் பெயர் என்னவாக இருக்கும்? மிகுந்த ஆர்வத்தில் நெட்டிசன்கள்...

ஸ்கோடா மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஷன் இன் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. விஷன் இன், எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடாவின் புதிய 2021 எஸ்யூவி காரின் பெயர் என்னவாக இருக்கும்? மிகுந்த ஆர்வத்தில் நெட்டிசன்கள்...

ஃபோக்ஸ்வேகன் - ஸ்கோடா கூட்டணியில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில்தான் இந்த இரு நிறுவனங்களில் இருந்து தயாரிப்பு மாடல்கள் எதிர்காலத்தில் இந்திய சந்தைக்கு வரவுள்ளன.

ஸ்கோடாவின் புதிய 2021 எஸ்யூவி காரின் பெயர் என்னவாக இருக்கும்? மிகுந்த ஆர்வத்தில் நெட்டிசன்கள்...

2020 ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்கோடாவின் சார்பில் விஷன் இன் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதன் நீளம் 4,256மிமீ, உயரம் 1,589மிமீ மற்றும் வீல்பேஸ் 2,671மிமீ நீளத்தில் வழங்கப்பட்டது. இந்த கான்செப்ட்டின் அடிப்படையில்தான் இந்த எஸ்யூவி காரை ஸ்கோடா நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ஸ்கோடாவின் புதிய 2021 எஸ்யூவி காரின் பெயர் என்னவாக இருக்கும்? மிகுந்த ஆர்வத்தில் நெட்டிசன்கள்...

2021ல் இந்தியா வரலாம் என்பதை தவிர்த்து, அறிமுகம் எப்போது என்பது இதுவரை உறுதியாக தெரியாத நிலையில் விஷன் இன் எஸ்யூவி கார் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தீவிர சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

ஸ்கோடாவின் புதிய 2021 எஸ்யூவி காரின் பெயர் என்னவாக இருக்கும்? மிகுந்த ஆர்வத்தில் நெட்டிசன்கள்...

அறிமுக தேதி மட்டுமின்றி இந்த எஸ்யூவி காரின் பெயரையும் ஸ்கோடா நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. என்ன மாதிரியான பெயர் இந்த காருக்கு சூட்டப்படவுள்ளது என்பதை அறிய நெட்டிசன்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஸ்கோடாவின் புதிய 2021 எஸ்யூவி காரின் பெயர் என்னவாக இருக்கும்? மிகுந்த ஆர்வத்தில் நெட்டிசன்கள்...

இந்த நிலையில் இதுகுறித்து கேள்வியெழுப்பிய இணையவாசி ஒருவருக்கு ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் சிஇஒ ஜாக் ஹோலிஸ், இன்னும் சில நாட்களில் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது என பதிலளித்துள்ளார்.

ஸ்கோடாவின் புதிய 2021 எஸ்யூவி காரின் பெயர் என்னவாக இருக்கும்? மிகுந்த ஆர்வத்தில் நெட்டிசன்கள்...

ஸ்கோடா நிறுவனம் கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் கார்மிக், கோனார்க், க்ளிக், குஷிக் மற்றும் கோஸ்மிக் என்ற ஐந்த பெயர்களை பதிவு செய்திருந்தது. இதனால் இந்த ஐந்தில் ஏதேனும் ஒரு பெயர் ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி காருக்கு சூட்டப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda to announce name of Vision IN SUV soon
Story first published: Wednesday, January 6, 2021, 23:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X