புதிய டாடா சஃபாரி எஸ்யூவியின் அட்வென்ச்சர் எடிசன் அறிமுகம்... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த 7 சீட்டர் தேர்வாக புதிய தலைமுறை டாடா சஃபாரி எஸ்யூவி இன்று விற்பனைக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ள புதிய டாடா சஃபாரியின் அறிமுகத்தின்போது, வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில், அதன் சிறப்பு பதிப்பு மாடலையும் டாடா மோட்டார்ஸ் களமிறக்கி உள்ளது.

புதிய டாடா சஃபாரி அட்வென்ச்சர் எடிசன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

டாடா சஃபாரி எஸ்யூவியின் விலை உயர்ந்த டாப் வேரியண்ட் அடிப்படையில் பல்வேறு சிறப்பு அலங்கார பாகங்களுடன் சிறப்பு பதிப்பு மாடல் வந்துள்ளது. சஃபாரி அட்வென்ச்சர் பர்ஸோனா என்ற பெயரில் வந்துள்ள இந்த மாடல் எக்ஸ்இசட் ப்ளஸ் என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். புதிய டாடா சஃபாரி எஸ்யூவியின் சிறப்பு பதிப்பு மாடலில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்ங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய டாடா சஃபாரி அட்வென்ச்சர் எடிசன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

புதிய டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்ஸோனா மாடலானது டிராப்பிக்கல் மிஸ்ட் என்ற பிரத்யேக வண்ணத் தேர்வில் கிடைக்கும். இந்த மாடலில் கருப்பு வண்ண பின்னணியுடன் க்ரில் அமைப்பு, ஹெட்லைட் க்ளஸ்ட்டர்களை சுற்றிலும் கருப்பு வண்ண அலங்கார பாகம் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய டாடா சஃபாரி அட்வென்ச்சர் எடிசன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

அதேபோன்று, ரூஃப் ரெயில்கள், பம்பர், கதவு கைப்பிடிகள், அலாய் வீல்கள் ஆகியவையும் கருப்பு வண்ணத்தில் உள்ளன. பானட்டில் சஃபாரி என்ற கருப்பு வண்ண எழுத்துக்கள் காருக்கு அதிக கவர்ச்சியையும், மதிப்பையும் வழங்குகிறது.

புதிய டாடா சஃபாரி அட்வென்ச்சர் எடிசன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

சாதாரண மாடலில் உட்புறத்தில் விசேஷ வெள்ளை வண்ண சீட் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்ட நிலையில், இந்த சிறப்பு பதிப்பு மாடலில் இளம் பழுப்பு வண்ணத்திலான சீட் அப்ஹோல்ஸ்ட்ரி வழங்கப்பட்டுள்ளன. ஸ்டீயரிங் வீல், கதவு கைப்பிடிகள், ஏர் வென்ட்டுகள், கியர் நாப், விசேஷ வண்ணத்திலான க்ரோம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் அலங்கார பாகங்கள் உள்ளன.

புதிய டாடா சஃபாரி அட்வென்ச்சர் எடிசன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியின் ட்வென்ச்சர் பெர்ஸோனா எடிசன் மாடலானது டாப் வேரிண்ட்டில் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும். மேலும், இசட்எக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டில் உள்ள அனைத்து வசதிகளும், சிறப்பம்சங்களும் இதில் தக்க வைக்கப்பட்டுள்ளன.

புதிய டாடா சஃபாரி அட்வென்ச்சர் எடிசன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

புதிய டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்ஸோனா எடிசன் மாடலானது 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய டாடா சஃபாரி அட்வென்ச்சர் எடிசன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியின் அட்வென்ச்சர் பெர்ஸோனா எடிசன் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ரூ.20.20 லட்சத்திலும், ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.21.45 லட்சத்திலும் விற்பனைக்கு கிடைக்கும். எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் விரைவில் வர இருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல்களுக்கு புதிய டாடா சஃபாரி எஸ்யூவி போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Tata Motors has also introduced a new ‘Adventure Edition' of the Safari, based on the top-spec XZ+ trim. The new Tata Safari Adventure Persona comes with an exclusive ‘Mystic Blue' paint scheme, with blacked-out elements all around.
Story first published: Monday, February 22, 2021, 15:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X