ஸ்டைலிஷான தோற்றத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4x4!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

டொயோட்டா அதன் புதிய ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4X4 காரினை விளம்பரப்படுத்தும் வகையில் புதிய டிவிசி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்டைலிஷான தோற்றத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4x4!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

ஜப்பானை சேர்ந்த பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா அதன் புதிய மாடலாக ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் புதிய லெஜெண்டர் 4x4 வேரியண்ட்டை சமீபத்தில் நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தான் தற்போது இந்த டிவிசி (தொலைக்காட்சி கமர்ஷியல்) வெளியிடப்பட்டுள்ளது.

டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் லெஜெண்டர் 4x4 காரை வழக்கமான நகர்புற சாலைகளிலும், கிராமப்புற சாலைகளிலும் பயன்படுத்தும் அதேநேரம் அட்வென்ச்சர் பயணங்களிலும் தாராளமாக ஈடுப்படுத்தலாம் என்பதை டொயோட்டா சுட்டிக்காட்டி உள்ளது.

ஸ்டைலிஷான தோற்றத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4x4!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

ஃபார்ச்சூனரின் புதிய டாப் வேரியண்ட்டாக கொண்டுவரப்பட்டுள்ள இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.42.33 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லெஜெண்டர் வேரியண்ட்கள் டீசல் என்ஜின் தேர்வுடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகையில் லெஜெண்டர் 4x4 காரில் பொருத்தப்படும் 2.8 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 204 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஸ்டைலிஷான தோற்றத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4x4!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் லெஜெண்டர் 4x4 வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. 4x4 ட்ரைவ்ட்ரெயின் தேர்வில் மட்டுமில்லாமல், பின்சக்கர ட்ரைவ் ட்ரெயின் தேர்விலும் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்டைலிஷான தோற்றத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4x4!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

அதேபோல், 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்விலும் ஃபார்ச்சூனர் கிடைக்கிறது. அதிகப்பட்சமாக 166 பிஎஸ் மற்றும் 245 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடனும் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. ஆனால் பெட்ரோல் என்ஜினை 4x4 ட்ரைவ்ட்ரெயின் தேர்வில் பெற முடியாது.

ஸ்டைலிஷான தோற்றத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4x4!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

டொயோட்டா ஃபார்ச்சூனரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.30.72 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. அதிகப்பட்சமாக ரூ.38.17 லட்சங்கள் வரையில் உள்ளன. இவற்றிற்கு அடுத்து ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4x2 வேரியண்ட்டின் விலை ரூ.38.60 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. லெஜெண்டர் 4x4 வேரியண்ட்டின் விலை ரூ.42.33 லட்சம் என ஏற்கனவே கூறிவிட்டோம்.

ஸ்டைலிஷான தோற்றத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4x4!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

இந்த டொயோட்டா எஸ்யூவி வாகனத்திற்கு மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, எம்ஜி க்ளோஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன. மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள ஸ்கோடா குஷாக்கும் போட்டியாக விளங்கவுள்ளது.

ஸ்டைலிஷான தோற்றத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4x4!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

ஆனால் உண்மையில் இவற்றை காட்டிலும் ஃபோர்டு எண்டேவியர் தான் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு முக்கியமான போட்டியாக விளங்கியது. ஆனால் ஃபோர்டின் இந்திய வெளியேற்றத்தால், எண்டேவியரின் விற்பனையும் நிறுத்தி கொள்ளப்பட்டது. இதனால் தற்போது இந்த எஸ்யூவி பிரிவு ஃபார்ச்சூனரின் ஆதிக்கத்தில் தான் உள்ளது.

ஸ்டைலிஷான தோற்றத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4x4!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

வழக்கமான ஃபார்ச்சூனர் வேரியண்ட்களுடன் ஒப்பிடுகையில், லெஜெண்டர் வேரியண்ட் ஆனது கூடுதல் முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இதற்கு இதன் முன்பக்க ஹெட்லேம்ப் செட்அப் மற்றும் க்ரில்லினை முக்கிய காரணமாக சொல்லலாம். சமீபத்திய லெஜெண்டர் 4x4 காரில் நீர்வீழ்ச்சி வடிவிலான எல்இடி டிஆர்எல்கள் உடன் குவாட்-எல்இடி ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்டைலிஷான தோற்றத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4x4!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

மேலும் இந்த வேரியண்ட்டில் முன்பக்க & பின்பக்க டர்ன் இண்டிகேட்டர்கள் சதுர வடிவில் வழங்கப்படுகின்றன. லெக்ஸஸ் மாடல்களில் உள்ளதை போன்று லெஜெண்டர் 4x4-இன் முன்பக்க க்ரில் பகுதியும் பளப்பளப்பான பியானோ கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது ஃபார்ச்சூனர் காரின் சாலை நிலைப்பாட்டில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டைலிஷான தோற்றத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4x4!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

இதனுடன் வெள்ளை-கருப்பு என்ற இரட்டை-நிற பெயிண்ட் தேர்வையும் இந்த புதிய வேரியண்ட்டின் மூலமாக ஃபார்ச்சூனர் பெற்றுள்ளது. இந்த பெயிண்ட் தேர்வில் மேற்கூரை ஆனது கருப்பு நிறத்தில் வழங்கப்படுகிறது. லெஜெண்டர் 4x4 காருக்கு இந்த ட்யுல்-டோன் நிறத்தேர்வு மட்டுமே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமின்றி, புதிய லெஜெண்டர் வேரியண்ட்டிற்கு முன்பக்க & பின்பக்க பம்பர்கள் மற்றும் இரட்டை-நிற அலாய் சக்கரங்களும் சற்று வித்தியாசமாக கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota releases new TVC for Fortuner Legender 4×4.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X