அப்கிரேட் செய்யப்பட்ட 2021 ஹூண்டாய் அவ்ரா செடான் ஷோரூமிற்கு வந்தது!! டெலிவிரிகள் விரைவில் துவக்கம்!

திருத்தியமைக்கப்பட்ட பின்பக்கத்துடன் 2021 ஹூண்டாய் அவ்ரா செடான் கார்கள் டீலர்ஷிப்பை வந்தடைய துவங்கியுள்ளன. இது தொடர்பான படங்களை பற்றி இனி தொடர்ந்து பார்ப்போம்.

அப்கிரேட் செய்யப்பட்ட 2021 ஹூண்டாய் அவ்ரா செடான் ஷோரூமிற்கு வந்தது!! டெலிவிரிகள் விரைவில் துவக்கம்!

புதிய நிதியாண்ட்டை மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை போன்று ஹூண்டாயும் விலை அதிகரிப்புடன் துவங்கியுள்ளது. இந்த வகையில் ஹூண்டாய் அவ்ராவின் புதிய விலைகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.

அப்கிரேட் செய்யப்பட்ட 2021 ஹூண்டாய் அவ்ரா செடான் ஷோரூமிற்கு வந்தது!! டெலிவிரிகள் விரைவில் துவக்கம்!

2019ஆம் ஆண்டின் இறுதியில் எக்ஸ்செண்ட் செடானுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட அவ்ராவின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.80 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இந்த காரின் விலைகள் முதல்முறையாக கடந்த 2021 ஜனவரி மாதத்தில் உயர்த்தப்பட்டன.

அப்கிரேட் செய்யப்பட்ட 2021 ஹூண்டாய் அவ்ரா செடான் ஷோரூமிற்கு வந்தது!! டெலிவிரிகள் விரைவில் துவக்கம்!

ரூ.9,800ல் முதல்முறையாக விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த ஹூண்டாய் செடான் காரின் விலைகள் இரண்டாவது முறையாக சில வாரங்களுக்கு முன்பு ரூ.4,240 அதிகரிக்கப்பட்டுள்ளன.

அப்கிரேட் செய்யப்பட்ட 2021 ஹூண்டாய் அவ்ரா செடான் ஷோரூமிற்கு வந்தது!! டெலிவிரிகள் விரைவில் துவக்கம்!

ஆனால் இந்த விலை உயர்வுக்கு காரணங்கள் உள்ளன. அதாவது, பின்பக்க விங் ஸ்பாய்லர் உள்ளிட்டவற்றுடன் ஹூண்டாய் நிறுவனம் அவ்ராவின் பின்பகுதியினை சற்று திருத்தியமைத்துள்ளது. இதற்கான தொகையை ரூ.4,240 ஆகும்.

அப்கிரேட் செய்யப்பட்ட 2021 ஹூண்டாய் அவ்ரா செடான் ஷோரூமிற்கு வந்தது!! டெலிவிரிகள் விரைவில் துவக்கம்!

இ, எஸ், எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ்+ மற்றும் எஸ்எக்ஸ்(ஒ) என்ற ஐந்து விதமான ட்ரிம் நிலைகளில் அவ்ரா விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் முதல் இ ட்ரிம்-ஐ தவிர்த்து மற்ற அனைத்து ட்ரிம் நிலைகளிலும் புதிய ரியர் விங் ஸ்பாய்லர் கிடைக்கும்.

அப்கிரேட் செய்யப்பட்ட 2021 ஹூண்டாய் அவ்ரா செடான் ஷோரூமிற்கு வந்தது!! டெலிவிரிகள் விரைவில் துவக்கம்!

காரின் தோற்றத்தை மெருக்கேற்றுவது மட்டுமின்றி இத்தகைய ஸ்பாய்லர் வாகனத்தின் காற்று இயக்கவியல் பண்பையும் மேம்படுத்தவல்லது. பின்பக்க ஸ்பாய்லர் உடன் அவ்ராவின் எஸ் வேரியண்ட்டின் ஏஎம்டி வெர்சன் கன் மெட்டலில் ஃபினிஷ் செய்யப்பட்ட 15-இன்ச் சக்கரங்களை பெற்றுள்ளது.

அப்கிரேட் செய்யப்பட்ட 2021 ஹூண்டாய் அவ்ரா செடான் ஷோரூமிற்கு வந்தது!! டெலிவிரிகள் விரைவில் துவக்கம்!

அதேபோல் ஆரம்ப நிலை இ வேரியண்ட்டில் இனி இரும்பு சக்கரங்கள் சற்று சிறியதாக 14 இன்ச்சிற்கு மாற்றாக 13 இன்ச்சில் பொருத்தப்படவுள்ளன. இந்த புதிய வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ள அதேநேரம் அவ்ராவின் எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஒ) ட்ரிம்களில் வழங்கப்பட்டுவந்த அர்காமிஸ் ப்ரீமியம் சவுண்ட் சிஸ்டம் நீக்கப்பட்டுள்ளது.

அப்கிரேட் செய்யப்பட்ட 2021 ஹூண்டாய் அவ்ரா செடான் ஷோரூமிற்கு வந்தது!! டெலிவிரிகள் விரைவில் துவக்கம்!

இந்த மாற்றங்கள் அனைத்தையும் ஏற்ற ஹூண்டாய் அவ்ரா செடான் கார்கள் டீலர்ஷிப்பிற்கு வருகை தர துவங்கியுள்ளன. ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான படங்களில் மாற்றியமைக்கப்பட்டதற்கு பிறகு அவ்ராவின் பின்பகுதி எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.

அப்கிரேட் செய்யப்பட்ட 2021 ஹூண்டாய் அவ்ரா செடான் ஷோரூமிற்கு வந்தது!! டெலிவிரிகள் விரைவில் துவக்கம்!

அர்காமிஸ் சவுண்ட் சிஸ்டம் நீக்கப்பட்டு இருப்பினும் ஹூண்டாய் அவ்ராவின் டாப் வேரியண்ட்களில் 8 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர் இல்லா சார்ஜிங், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் ஓட்டுனர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை பெறலாம்.

அப்கிரேட் செய்யப்பட்ட 2021 ஹூண்டாய் அவ்ரா செடான் ஷோரூமிற்கு வந்தது!! டெலிவிரிகள் விரைவில் துவக்கம்!

ஹூண்டாய் அவ்ரா காம்பெக்ட் செடான் கார் 1.2 லிட்டர், 4-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் என மூன்று விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Most Read Articles

English summary
2021 Hyundai Aura With Refreshed Rear Styling, Arrives At Dealer Yard.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X