சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி... பல மடங்கு உயர இருக்கும் புதிய வாகனங்களின் விலை... பதறும் கார் விற்பனையாளர்கள்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடியால் புதிய வாகனங்களின் விலை பல மடங்கு உயரும் அபாயம் உருவாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலைக் கீழே பார்க்கலாம், வாங்க.

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி... பல மடங்கு உயர இருக்கும் புதிய வாகனங்களின் விலை... பதறும் கார் விற்பனையாளர்கள்!

அண்மையில் நடைபெற்ற ஓர் விபத்துகுறித்த வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றம், செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்பனையாகும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி... பல மடங்கு உயர இருக்கும் புதிய வாகனங்களின் விலை... பதறும் கார் விற்பனையாளர்கள்!

சென்னை உயர்நீதிமன்றத்திந் இந்த அதிரடி உத்தரவினாலேயே புதிய வாகனங்களின் விலை மிகக் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆம், ஐந்தாண்டுகளுக்கு பம்பர் டூ பம்பர் வாகனங்களுக்கான காப்பீடு கட்டாயமாக்கப்படும் பட்சத்தில் ஓர் புதிய வாகனத்தின் விலை தற்போதைய விலையில் இருந்து எட்டு சதவீதம் தொடங்கி 10 சதவீதம் வரை விலையை உயர்த்த வழி வகுக்கும்.

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி... பல மடங்கு உயர இருக்கும் புதிய வாகனங்களின் விலை... பதறும் கார் விற்பனையாளர்கள்!

புதிய வாகன விற்பனையாளர்களின் கூற்றுப்படி, "ஓர் புதிய காரின் விலை ரூ. 5 ஆயிரம் தொடங்கி ரூ. 5 லட்சம் வரையில் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. இது ஏற்கனவே அதிகரித்து காணப்படும் சிக்கல்களை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி... பல மடங்கு உயர இருக்கும் புதிய வாகனங்களின் விலை... பதறும் கார் விற்பனையாளர்கள்!

"தற்போது ஒட்டுமொத்த வாகன சந்தையுமே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லேசான வாகன விற்பனை இழப்பைச் சந்தித்த வண்ணம் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் வாகனங்களின் விலையை பல மடங்கு உயர்த்தும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்தொவரு நடவடிக்கையும் அதன் விற்பனையை கணிசமாக பாதிப்படையச் செய்யும்" என ஆட்டோ மொபைல் விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA)தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி... பல மடங்கு உயர இருக்கும் புதிய வாகனங்களின் விலை... பதறும் கார் விற்பனையாளர்கள்!

புதிய காப்பீடு கொள்கையால் இருசக்கர வாகனங்கள் (பைக் மற்றும் ஸ்கூட்டர்) விலை ரூ. 5 ஆயிரம் தொடங்கி ரூ. 6 ஆயிரம் உயரும். இதேபோல் ஆல்டோ அல்லது க்விட் போன்ற ஆரம்ப நிலை கார்களின் விலை ரூ. 50 ஆயிரம் வரையிலும், சற்று உயர் நிலை மாடல்களான க்ரெட்டா போன்ற வாகனங்களின் விலை ரூ. 2 லட்சம் வரையிலும் உயரும் என கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது.

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி... பல மடங்கு உயர இருக்கும் புதிய வாகனங்களின் விலை... பதறும் கார் விற்பனையாளர்கள்!

வாகனங்களுக்கு நீண்ட கால இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறைப்பட்டு, அது விலை நிர்ணயிக்கும் ஒழுங்குகட்டுப்பாட்டு துறை மூலம் சமீபத்தில் பின் வாங்கப்பட்டது. 2020 ஆகஸ்டு மாதத்தில் இர்டாய் அதனை பின் வாங்கியது. தொடர்ந்து, காப்பீடு பிரீமியம் கட்டமைப்பை மாற்றவும் இர்டாய்-க்கு முன்னணி நிறுவனத்திடம் இருந்து கோரிக்கைகள் எழும்பின.

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி... பல மடங்கு உயர இருக்கும் புதிய வாகனங்களின் விலை... பதறும் கார் விற்பனையாளர்கள்!

தற்போது செயல்பாட்டில் இருக்கும் 1 வருட கால காப்பீடு என்பது ஓர் காரின் விலையில் 3 சதவீதம் பங்கினைக் கொண்டது ஆகும். இதனை ஐந்தாண்டுகளாக மாற்றும் பொழுது ஓர் தொகையை கூடுதல் சுமையாக அதிகரிக்க வழி வகுக்கும் என பெரு நிறுவனங்கள் வறுத்தம் தெரிவித்தன. நாட்டின் முன்னணி நிறுவனங்கள்கூட இதுகுறித்த கருத்துக்களையும், வறுத்தத்தையும் தெரிவித்திருந்தன.

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி... பல மடங்கு உயர இருக்கும் புதிய வாகனங்களின் விலை... பதறும் கார் விற்பனையாளர்கள்!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தற்போது சென்னை உயர்நீதிமன்றம் விபத்துகுறித்து மேற்கொண்டு வழக்கு விசாரணையில் ஐந்தாண்டுகள் பம்பர் டூ பம்பர் என்ற காப்பீடு கட்டாயம் என அறிவித்திருக்கின்றது. இந்த தகவல் புதிய வாகனத்தை வாங்க திட்டமிட்டிருப்பவர்களை மட்டுமின்றி, வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி... பல மடங்கு உயர இருக்கும் புதிய வாகனங்களின் விலை... பதறும் கார் விற்பனையாளர்கள்!

பம்பர் டூ பம்பர் என்ற சொல் தொழில்துறை அதிகாரிகள் சிலருக்கே ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது பரந்த அர்த்தத்தைக் கொண்ட சொல்லாக இருக்கின்றது. அதாவது விரிவான காப்பீடு அல்லது கவர் என்று இது பொருள்படும். இது பூஜ்யம் தேய்மானக் கொள்கையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி... பல மடங்கு உயர இருக்கும் புதிய வாகனங்களின் விலை... பதறும் கார் விற்பனையாளர்கள்!

ஆகையால், இந்த திட்டத்தின்கீழ் காப்பீடு செய்யப்படும் பாகங்கள் அனைத்தும் எந்த விலக்கும் இல்லாமல் மாற்றப்படும். இது வாகன உரிமையாளர்களின் இழப்புகளுக்கு உரியளவில் ஈடு செய்ய உதவியாக இருக்கும். எனவேதான் இதனை சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 1ம் தேதி கட்டாயப்படுத்தியிருக்கின்றது. நீதிபதி எஸ். வைத்தியநாதன் தலைமையிலான அமர்வே இந்த உத்தரவை வழங்கியிருக்கின்றது. அதேசமயம், இப்புதிய காப்பீட்டு திட்டத்தால் பல மடங்கு வாகனங்களின் விலை உயரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
New vehicle price will increase soon here is why
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X