ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட டிகுவான் எஸ்யூவி இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் மாற்றங்கள் மற்றும் முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் மிட்சைஸ் பிரிமீயம் எஸ்யூவி ரகத்தில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் முக்கிய போட்டியாளராக இருக்கிறது. கடந்த ஆண்டு பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளால் இந்த மாடல் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது.

இந்த நிலையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் சிறிய மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்ட டிகுவான் எஸ்யூவி கடந்த ஆண்டு உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த புதிய டிகுவான் எஸ்யூவியானது பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்புகளுடன் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் சில முக்கிய மாற்றங்களுடன் கூடுதல் சிறப்புகளை பெற்றுள்ளது. டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது காரின் முகப்பை மிகவும் வசீகரமாக காட்டுவதற்கும் உதவுகிறது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

முக்கோண வடிவிலான பனி விளக்குகளுடன் புதிய பம்பர் அமைப்பு முன்புறத்தை அலங்கரிக்கிறது. பின்புறத்தில் மெல்லிய டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இன்டீரியரிலும் புதுப்பொலிவுடன் வசீகரிக்கிறது. புதிய கேபின் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டு இருப்பதுடன், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். ஓட்டுனர் இருக்கைக்கு மெமரி வசதி உள்ளது. 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும் இதன் முக்கிய சிறப்பு வசதியாக கூறலாம்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

தட்டையான அடிப்பாகத்துடன் ஸ்டீயரிங் வீல், 30 விதமான வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்த காரில் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு வசதி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 4 சிலிண்டர்கள் கொண்ட 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 4 மோஷன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியானது நைட்ஷேடு புளூ, ப்யூர் ஒயிட், ஓரிக்ஸ் ஒயிட், கிங்ஸ் ரெட், ரிஃப்லெக்ஸ் சில்வர், டீப் பிளாக் மற்றும் டால்ஃபின் க்ரே ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி ரூ.31.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஹூண்டாய் டூஸான், சிட்ரோன் சி5 ஆகிய 5 சீட்டர் பிரிமீயம் ரக மிட்சைஸ் எஸ்யூவி மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவிக்கு புக்கிங் துவங்கப்பட்டு இருக்கிறது. வரும் ஜனவரி மாத மத்தியில் இருந்து டெலிவிரிப் பணிகள் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் பிரிமீயம் மிட்சைஸ் ரக எஸ்யூவி மாடல்களில் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும் என்று நம்பலாம்.

Most Read Articles

English summary
New Volkswagen Tiguan Facelift Launched In India.
Story first published: Tuesday, December 7, 2021, 11:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X