2022ல் உலகளவில் அறிமுகமாகும் ஃபோர்டு எண்டேவியரின் அப்கிரேட் வெர்சன்!! இந்திய வருகை எப்போது இருக்கும்?

புதிய தலைமுறை ஃபோர்டு எண்டேவியர் அடுத்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022ல் உலகளவில் அறிமுகமாகும் ஃபோர்டு எண்டேவியரின் அப்கிரேட் வெர்சன்!! இந்திய வருகை எப்போது இருக்கும்?

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் புதிய தலைமுறை ரேஞ்சரை 2022ல் அறிமுகப்படுத்தவுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் எண்டேவியர் என அழைக்கப்பட்டுவரும் எவரெஸ்ட்டின் புதிய தலைமுறையையும் 2022ல் அறிமுகப்படுத்த இந்த அமெரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

2022ல் உலகளவில் அறிமுகமாகும் ஃபோர்டு எண்டேவியரின் அப்கிரேட் வெர்சன்!! இந்திய வருகை எப்போது இருக்கும்?

வெளிப்புறம் மற்றும் உட்புறம் மட்டுமின்றி புதிய என்ஜின் தேர்வுகளையும் இந்த புதிய தலைமுறை வாகனத்தில் தயாரிப்பு நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் 2022 ஃபோர்டு எண்டேவியர் மற்றும் ரேஞ்சர் மாடல்களில் இரு டீசல் மற்றும் புதிய ஒரு பெட்ரோல் ப்ளக்-இன் ஹைப்ரீட் என மொத்தம் 3 என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

2022ல் உலகளவில் அறிமுகமாகும் ஃபோர்டு எண்டேவியரின் அப்கிரேட் வெர்சன்!! இந்திய வருகை எப்போது இருக்கும்?

இதில் ஒன்றான 2.0 லிட்டர் இரட்டை-டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 210 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனையும், மற்றொரு புதிய 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு 6-சிலிண்டர் டீசல் என்ஜின் 250 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவைகளாக வழங்கப்படவுள்ளன.

2022ல் உலகளவில் அறிமுகமாகும் ஃபோர்டு எண்டேவியரின் அப்கிரேட் வெர்சன்!! இந்திய வருகை எப்போது இருக்கும்?

இதில் ஆற்றல்மிக்க 6-சிலிண்டர் டீசல் என்ஜின் தேர்வு எண்டேவியரின் டாப் வேரியண்ட்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்த டீசல் என்ஜின் அமெரிக்காவில் பிரபலமான ஃபோர்டு எஃப்-150 ட்ரக்கிலும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

2022ல் உலகளவில் அறிமுகமாகும் ஃபோர்டு எண்டேவியரின் அப்கிரேட் வெர்சன்!! இந்திய வருகை எப்போது இருக்கும்?

புதிய எண்டேவியர் மற்றும் ரேஞ்சரில் பெட்ரோல் என்ஜின் தேர்வாக ப்ளக்-இன் ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்படவுள்ள 2.3 லிட்டர் டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 270 பிஎச்பி மற்றும் 680 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022ல் உலகளவில் அறிமுகமாகும் ஃபோர்டு எண்டேவியரின் அப்கிரேட் வெர்சன்!! இந்திய வருகை எப்போது இருக்கும்?

இந்த புதிய என்ஜின்களின் வருகையினால் தற்சமயம் இந்திய எண்டேவியரில் வழங்கப்பட்டு வரும் 3.2 லிட்டர் 5-சிலிண்டர் என்ஜின் தேர்வு நிறுத்தி கொள்ளப்படவுள்ளது. புதிய என்ஜின் தேர்வுகள் மட்டுமின்றி ஆஃப்-ரோட்டிற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய வைல்ட்ட்ராக் எக்ஸ் என்ற புதிய வேரியண்ட்டையும் புதிய எண்டேவியர் ஏற்கவுள்ளது.

2022ல் உலகளவில் அறிமுகமாகும் ஃபோர்டு எண்டேவியரின் அப்கிரேட் வெர்சன்!! இந்திய வருகை எப்போது இருக்கும்?

இந்த புதிய வேரியண்ட்டையும் சேர்த்து மொத்தம் 6 வேரியண்ட்களில் 4 ட்ரைவிங் மோட்களில் 2022 ஃபோர்டு எவரெஸ்ட் (எ) எண்டேவியர் கார் வழங்கப்படவுள்ளது. அம்பியண்ட் (சுற்றுபுறம்), ட்ரெண்ட், ட்ரெண்ட் ஸ்போர்ட், டைட்டானியம் மற்றும் பிளாட்டினம் என்பன மற்ற ஐந்து வேரியண்ட்களாகும்.

2022ல் உலகளவில் அறிமுகமாகும் ஃபோர்டு எண்டேவியரின் அப்கிரேட் வெர்சன்!! இந்திய வருகை எப்போது இருக்கும்?

புதிய 12.8 இன்ச்சில் செங்குத்தான திரை உடன் பிராண்டின் சிங்க்4 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் புதிய 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை பெற்றுவரும் புதிய ஃபோர்டு எவரெஸ்ட்டின் உலகளாவிய அறிமுகம் ஏற்கனவே கூறியதுபோல் 2022ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருக்கலாம். இதன் இந்திய வருகை 2022ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2023ஆம் ஆண்டின் துவக்கத்திலோ எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Next-gen Ford Endeavour (Everest) To Be Introduced In 2022
Story first published: Thursday, February 11, 2021, 15:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X